பாலுவை விட மலேஷியா எப்படி பலப் பாடல்களில் மண்ணின் மனத்தை, கிராமிய உணர்வை கொண்டு வந்தாரோ அதுபோல, யேசுதாசை விட ஜெயச்சந்திரன். மேகம் கருக்குது பாடலை சமிபத்தில் கேட்ட போது, ஆரம்பத்தில் ராஜாவின் குரல் ஒலிக்கிறது. இந்தப் பாடல் முழுவதுமே ராஜா பாடியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்ற வைக்கிறது முதலில் வரும் இரண்டடி வார்த்தைகளில் ஒலிக்கும் ராஜா குரல். எப்போது யேசுதாஸ் பாட ஆரம்பிக்கிறாரோ அந்த நொடியே அந்தப் பாடலின் நேட்டிவிட்டி உணர்வு காற்றில் மறைந்து, ஒரு புரோஃபெஷ்னல் தன்மை வந்துவிடுகிறது. ராஜா குரலை தவிர்த்து அந்தப் பாடலின் முழு உணர்வை பிரதிபலிக்கும் ஆளுமை கொண்டவர்கள் மலேஷியாவும், ஜெயச்சந்திரனும் மட்டுமே.