Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Hybrid View

  1. #1
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஆர்கேஎஸ்,

    நான் பலமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். விதண்டாவாதம் செய்பவர்கள், திரைபடத்தின் வணிகரீதியான சமாசாரங்களை பற்றி தெரியாதவர்கள் இவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம் என்று. அதே போல் ஒரு ரசிகர் மன்ற நோட்டிஸை வைத்துக் கொண்டு பேசுபவர்களிடம் லாஜிக் எதிர்பார்க்க முடியாது.

    அங்கே எழுதப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் ஏற்கனவே தெளிவாக பதில் பலமுறை சொல்லியிருக்கிறோம். இருந்தாலும் அவ்வப்போது இதை எழுதுவார்கள். இப்போது உங்களுக்காக என்று மட்டுமில்லை லாஜிக் தெரிந்த அனைவருக்கும் இந்த பதில்.

    முதல் பாயிண்ட் வசூல் ஒப்பிடு. ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். உணர்சிவசப்ப்படும்போது சில உண்மைகள் கூட கண்ணுக்கு தெரியாது. சென்னையில் மிக பெரிய திரையரங்கு குளோப். 70-களில் அலங்கார் என்ற பெயர் மாற்றம் பெற்றது. அந்த நேரம் பிலிமாலயா மாத இதழில் வந்த கேள்வி பதில் ஒன்று கீழே அதே போல் கொடுத்திருக்கிறேன்.

    கேள்வி: சென்னையில் அதிக இருக்கைகளை கொண்ட திரையரங்கம் எது?

    பதில்: மவுண்ட் ரோடு எல்ஐசி கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் அரங்கம். இது "அலங்கார"த்திற்காக சொல்லப்படும் வார்த்தை இல்லை. "சத்யமா"ன உண்மை.

    சித்ரா திரையரங்கை பொறுத்தவரை குளோப் அரங்கை விட சிறியது. குளோப் அரங்கம் கிட்டத்தட்ட 1200 இருக்கைகள் உடையது. சித்ரா அரங்கமோ 1000-த்திற்கும் கீழே. முதல் மூன்று வாரத்தில் குளோப் திரையரங்கில் அனைத்து காட்சிகளுமே ஹவுஸ் புல்லாக ஓடிய சிவந்த மண் [முதல் நாள் முதல் காட்சியிலிருந்து தொடங்கி 125 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல். அதாவது முதல் 40 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் புல்] எப்படி அதை விட சிறிய அரங்கமான சித்ராவில் ஓடிய நம் நாடு படத்தை விட குறைவாக வசூல் பெற்றிருக்க முடியும்? சென்னையை சேர்ந்த நமது ரசிகர்களே கூட இந்த லாஜிக்கை யோசிக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

    அனைத்து ஊர்களிலும் சிவந்த மண் முன்னிலை பெற்றது என்பதற்கு ஒரு சோறு பதமாக ஒரு உதாரணம்.

    மதுரை சென்ட்ரல் - சிவந்த மண் -117 நாட்கள் - Rs 3,37, 134.95 p

    மதுரை மீனாட்சி - நம் நாடு - 133 நாட்கள் - Rs 3,06,000/- சொச்சம்

    மதுரை மீனாட்சி- ஒளி விளக்கு -147 நாட்கள்- Rs 3,16,000/- சொச்சம்

    இவை அள்ளி விடப்பட்ட தகவல்கள் அல்ல. உண்மையான நிலவரம். இதற்கு மேலும் விவரங்கள் வேண்டுவோர் அருமை நண்பர் வினோத் சாரை அணுகலாம். காரணம் அண்மையில்தான் சென்னை முதல் குமரி வரை சிவந்த மண்ணின் வசூல் விவரங்களை அவர் கேட்டு தெரிந்துக் கொண்டிருக்கிறார்.

    அடுத்து சிவந்த மண் நஷ்டம் என்று ஸ்ரீதர் சொன்னதாக சொல்லபடுவது. அவர்கள் சொல்லும் பேட்டி(கள்) பத்திரிக்கையில் வந்ததாகவே இருக்கட்டும். அந்த பேட்டியை எப்போது கொடுத்திருக்கிறார்? 1975 அல்லது 1985? இதை ஏன் அவர் 1970-லிலோ 71-லிலோ அல்லது 1972-லிலோ சொலலவில்லை? முந்தைய படம் நஷ்டம் எனும்போது ஏன் அதே நாயகனிடம் சென்று கால்ஷீட் பெற்று ஹீரோ-72 ஆரம்பித்தார்? அது மட்டுமா?

    1974-ல் உரிமைக்குரல் படப்பிடிப்பு தொடங்கி நடந்துக் கொண்டிருக்கும்போதே. அன்றைக்கு இந்தியாவெங்கும் மகத்தான வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருந்த பாபி திரைப்படத்தை தமிழில் தயாரிக்க ராஜ்கபூரிடம் பேசி விட்டு ரிஷிகபூர் நடித்த வேடத்தில் தமிழில் நடிகர் திலகத்தின் மூத்த புதல்வர் ராம்குமார் அவர்களை நடிக்க வைக்க ஸ்ரீதர் அன்னை இல்லம் வந்து நடிகர் திலகத்துடனும் அவர் சகோதரர் வி.சி.சண்முகம் அவர்களுடன் இதைப் பற்றி பேசினாரே! அவர்கள் சரி என்று சொல்லும் முன்னரே பத்திரிக்கைகளில் செய்தி கொடுத்தாரே! அப்போது நஷ்ட கணக்கை பற்றி பேட்டி கொடுத்திருக்கலாமே!

    அன்றைக்கு விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு [1972-75] படித்துக் கொண்டிருந்தார் ராம். நடிப்போ இயக்கமோ தயாரிப்போ எதுவாக இருந்தாலும் டிகிரி முடித்த பிறகுதான் என்று விசிஎஸ் உறுதியாக கூறி விட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது அது மட்டுமா? 1975-ல் "ஒ மஞ்சு" படம் தொடங்கும்போது ஸ்ரீதர் இளைய திலகம் பிரபுவை நாயகனாக்க முயற்சி எடுத்தாரே, அப்போது நஷ்டம் பற்றி தெரியவில்லையா?
    .
    இனி 1970-ல் இதே ஸ்ரீதர் இதே சிவந்த மண் பற்றி என்ன சொன்னார் தெரியுமா? 1970 மே மாதம் சித்ராலயா வார இதழை ஆரம்பிக்கிறார். அன்றைக்கு ஹிந்தி சினிமாவுகென்றெ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை குழுமம் ஸ்க்ரீன் [Screen] என்ற வார இதழை தினசரி நாளேட்டின் வடிவமைப்பில் நடத்திக் கொண்டிருந்தனர்.

    அதே பாணியில் சித்ராலயாவின் வடிவமைப்பும் அமைந்தது. பத்திரிக்கை ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் ஸ்ரீதர் கேள்வி பதில் பகுதியை ஆரம்பிக்கிறார். அதில் ஒரு வாசகர் கேள்வி கேட்கிறார். “சிவந்த மண் உங்களுக்கு நஷ்டமாமே?” என்று அதற்கு ஸ்ரீதர் சொல்கிறார் “வருமான வரி அதிகாரிகளிடம் வந்து சொல்லுங்களேன். லாபத்தை குறைத்து காண்பித்து விட்டேன் என்று குடைகிறார்கள்”

    சிவந்த மண் லாபம் என்று வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார் ஸ்ரீதர். நஷ்டம் வந்திருந்தால் லாபம் என்று காண்பித்திருப்பாரா? அதற்கு வரிதான் கட்டியிருப்பாரா? இந்த சித்ராலயா இதழ்களை சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் பார்வையிடலாம். .

    உண்மையில் ஸ்ரீத்ருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? . தர்த்தி இந்திப்படம் மிக நன்றாக ஓடியும் வட மாநில விநியோகஸ்தர்கள் சரியான கணக்கை ஸ்ரீதரிடம் காண்பிக்காமல் ஏமாற்றியிருக்கின்றனர். அவர்களை பெரிதும் நம்பிய ஸ்ரீதர் இறுதியில் கணக்கு பார்த்தபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கின்றார். இதை சித்ராலயா கோபு அவர்களே ஒரு உரையாடலில் வெளிபடுத்தினார். .

    அவளுகென்று ஓர் மனம் பற்றி அனைவரும் சொன்னார்கள். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் அந்த படத்தையும் ஸ்ரீதர் ஹிந்தியில் எடுத்தார். தமிழில் பிளாப் என்றால் ஹிந்தியில் மெகா பிளாப். மிகப் பெரிய நஷ்டம். அதன் பிறகு விஷ்ணுவர்தனை தமிழில் அறிமுகப்படுத்திய அலைகள் ஏற்படுத்திய நஷ்டம், சித்ராலயா பத்திரிக்கை நடத்திய வகையில் ஏற்பட்ட இழப்பு இவைதான் ஸ்ரீதரின் பொருளாதார பிரச்சனைக்கு காரணமே தவிர நடிகர் திலகமோ அவர் படங்களோ அல்ல.

    இனி சந்திரமௌலி புத்தகத்திற்கு வருவோம். நண்பர் ஒருவர் அந்த புத்தகத்தை வைத்திருக்கிறார். நேற்று அலைபேசியில் அவரிடம் படிக்க சொல்லி கேட்டேன். சிவந்த,மண் படம் சம்மந்தமாக இரண்டு மூன்று பக்கங்கள் வருகின்றது. அதில் ஒரு இடத்தில கூட சிவந்த மண் படத்தினால் நஷ்டம் என்றோ தோல்வி என்றோ அதில் எழுதப்படவில்லை.

    ஒரு வாதத்திற்காக சந்திரமௌலி புத்தகத்தில் அப்படி வந்திருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அதில் சிவந்த மண் பற்றி எழுதியிருப்பது உண்மை என்றால் நண்பர் கலைவேந்தன் இங்கே பிரசுரித்த அந்த புத்தகம் பற்றிய மதிப்புரையில் வேறு இரண்டு விஷயங்களைப் பற்றியும் அதில் குறிப்பு காணப்படுகிறது.

    ஒன்று உரிமைக்குரல் படப்பிடிப்பின்போது எம்ஜிஆர் ஸ்ரீதரை பாடாய் படுத்தினார். ஸ்ரீதர் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டார். என்று சொல்லியிருக்கிறார். அது உண்மை என்று ஒப்புக் கொள்கிறார்களா?

    இரண்டாவது அண்ணா நீ என் தெய்வம் படமும் மீனவ நண்பன் படமும் ஸ்ரீதர் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் அண்ணா நீ என் தெய்வம் பட தயாரிப்பாளர்களால் பணம் புரட்ட முடியவில்லை. ஆகவே படம் தொடரப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் எம்ஜிஆர் பட தயாரிப்பாளருக்கு பணம் தர யாரும் முன் வர மாட்டார்கள் என்று அர்த்தமா? அதையும் உண்மை என்று ஒப்புக் கொள்வார்களா? .

    இனி மேலாவது நமது ரசிகர்கள் வேறு யாராவது சிவந்த மண் பற்றி இப்படி பேசினால் இந்த பதிலை பார்த்துக் கொள்ளும்படி சொன்னால் போதும்.

    இந்த பதிவே நீண்டு விட்டது. APN சொன்னது பற்றியும் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறோம். இனி அதற்கும் வேண்டுமென்றால் பதில் பிறகு தருகிறேன்.

    இந்த நேரத்தில் நாம்தான் இதை ஆரம்பித்தது போல் வழக்கம் போல் ஒரு சரடு. பாஸ்கர் சொன்னது பழைய காலங்களில் தவறான தகவல்கள் குறிப்பாக நடிகர் திலகம் அவர்களுக்கு எதிரான பிரசாரங்கள் நிறைய நடந்தன. அவற்றில் ஒன்றுதான் சிவந்த மண் தோல்வி என்பது. இதை சொல்லக் கூடாதா? இதில் என்ன தவறு இருக்கிறது? தேவையில்லாமல் வாதம் செய்துவிட்டு பின் நம் தலையில் பழி.

    முத்தையன் சார் சொன்னது போல் நானும் முன்பே சொன்னது போல் சிவாஜி படங்கள் எதுவும் ஓடவில்லை என்று ஒப்புக் கொண்டுவிட்டோம் என்றால் அவர்களுக்கு சந்தோஷமாக போய் விடும். .

    என்ன செய்வது? உண்மைகளை ஒப்புக் கொள்ள மனம் இல்லாதவர்களிடம் இதை தவிர வேறு எதை எதிர் பார்க்க முடியும்?

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    One more inf about SIVANTAMANN Tosedays one of my friend by name gopal was the repesentaive for globe on behalf of chitralaya i happened to sit with him all the days and enjoy the movie till interval. just to make the film flop gmobe started matinee shows by sharp 2pm eveni show by6 pm but nothing prevented the crowds and hfull was awesome with lot of return crowds for the first 25-30days.
    pleasant memories.

  4. Likes Russellbzy liked this post
  5. #3
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Excellent murali sir very very apt reply

  6. Likes Russellbzy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •