Page 294 of 397 FirstFirst ... 194244284292293294295296304344394 ... LastLast
Results 2,931 to 2,940 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #2931
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சூப்பர்ஸானிக் ஹீரோவின் சூப்பர்ஹிட் ஃபிலிம்

    குலேபகாவலி

    [29.7.1955 - 29.7.2013] : 59வது ஆண்டு துவக்கம்

    சீர்மேவும் சென்னையின் சீரான புள்ளிவிவரம்

    COMMERCIAL CLASSIC என்கின்ற அந்தஸ்தில் கண்ணியத்தோடு போற்றப்படும் கலையுலக கனவானின் "குலேபகாவலி" முதல் வெளியீட்டில், 29.7.1955 வெள்ளியன்று சென்னையில் கெயிட்டி, ஸ்ரீகிருஷ்ணா, உமா, ராஜகுமாரி ஆகிய நான்கு திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.

    சென்னை 'கெயிட்டி'யில் 29.7.1955 முதல் 13.10.1955 வரை 77 நாட்கள் வெற்றிமுரசு கொட்டியது. 14.10.1955 வெள்ளியன்று 'கெயிட்டி'யில் "அனார்க்கலி" மொழிமாற்று[டப்பிங்] திரைப்படம் வெளியானது.

    இதே போல 'ஸ்ரீகிருஷ்ணா' திரையரங்கிலும் 29.7.1955 முதல் 13.10.1955 வரை 77 அபார வெற்றி நாட்கள். 14.10.1955 வெள்ளியன்று 'ஸ்ரீகிருஷ்ணா'வில், ஜெமினி-சாவித்திரி இணைந்து நடித்த "மாமன் மகள்" திரைப்படம் வெளியானது.

    'உமா'வில் 29.7.1955 தொடங்கி 29.9.1955 முடிய 63 வளமான வெற்றி நாட்கள். 30.9.1955 வெள்ளியன்று 'உமா'வில் "ஷாஹி மெஹ்மான்" என்ற ஹிந்தித் திரைப்படம் வெளியானது.

    அதே போல 'ராஜகுமாரி'யிலும் 29.7.1955 அன்று ஆரம்பித்து 29.9.1955 முடிய 63 வனப்பான வெற்றி நாட்கள். 30.9.1955 வெள்ளியன்று இந்த அரங்கில் 'குரு தத்'தின் "Mrs. & Mr. 1955", ஹிந்தித் திரைப்படம் வெளியானது.

    ஆக, குணக்குன்றாகக் கோலோச்சியவரின் "குலேபகாவலி", முதல் வெளியீட்டில், சிங்காரச் சென்னையில் ஓடிய நாட்கள் மிகச் சரியாக:

    கெயிட்டி - 77 நாட்கள்
    ஸ்ரீகிருஷ்ணா - 77 நாட்கள்
    உமா - 63 நாட்கள்
    ராஜகுமாரி - 63 நாட்கள்

    மொத்தத்தில், சென்னை மற்றும் தென்னகமெங்கும் மிகமிக வெற்றிகரமாக ஓடி, பாக்ஸ்-ஆபீஸில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கிய COMMERCIAL CLASSIC, "குலேபகாவலி".


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2932
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    மயக்கும் மாலை ! இனிக்கும் இரவு ! இன்னல் ! தீர்வு !

    மயிலிறகு மெலடி, கொம்புத்தேன் குரல்களில் [ஜிக்கி - ராஜா]!
    Charmer MGR in his Romantic Best !
    வைரவிழாவை எட்டப்போகும் பாடல் !
    வைடூரியப் பாடல் !




    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #2933
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நான் சொக்கா போட்ட நவாப்பு !
    செல்லாது உங்க ஜவாப்பு !




    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #2934
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    வாத்தியாரின் அறிவுரை

    esvee சார், தாங்கள் தினந்தோறும் கேட்டு மகிழும் இந்த அற்புத கானத்தை உள்ளடக்கிய இந்தப் பாடல் பதிவை தங்களுக்கே dedicate செய்கிறேன் !

    "கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
    உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
    அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்
    அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது"


    உண்மை-நேர்மை-வாய்மை என்பவையே உறுதியான உயர்வுக்கு ஒரே வழி என்கின்ற உயர்ந்த தத்துவத்தை அன்றும்-இன்றும்-என்றும் என்றென்றும் பறைசாற்றும் பாடல். MT in his inimitable style steals the whole song as usual and makes every other person in the scenario feel very ordinary. Stellar performance from the movie-god of the masses.



    "போடும் பொய்த்திரையை கிழித்துவிடும் காலம் !
    புரியும் அப்போது மெய்யான கோலம் !

    பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை !
    உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை !

    நன்றி மறவாத நல்லமனம் போதும் !
    என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் !"

    தன்னம்பிக்கையை துளிர்விடச்செய்யும் நவரத்தின வரிகள்...!

    வாத்தியார் பாட்டு : மல்டிவைட்டமின் டேப்லெட்டு !


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #2935
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு பம்ம்லார் சார்


    1955ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் வெற்றி சித்திரம்

    ''குலேபகாவலி '' திரைபடத்தில் இடம் பெற்ற மிகவும்

    புகழ் பெற்ற

    சொக்க போட்ட நவாபு செல்லாது உங்கள் .....

    மயக்கும் மாலை பொழுதே ...........

    இரண்டு பாடல்களை பதிவிட்டுள்ளது அருமை .


    சென்னை நகரில் ''குலேபகாவலி '' ஓடிய அரங்குகள் மற்றும்

    நாட்கள் தகுந்த ஆதாரத்துடன் புள்ளி விபரமாக பதிவிட்டமைக்கு

    நன்றி .

    இன்றைய சமுதாயத்தில் பல நல்லவர்கள் இருந்தாலும்

    போட்டி , பொறமை , ஏமாற்றுதல் , சதி ,பொய்மை

    நன்றி இல்லாமை , என்ற சூழ் நிலைக்கு ஏற்ப சிலர்

    வாழ்ந்து வருபவர்களை நம் வாத்தியார்
    '' கண்ணை நம்பாதே ''பாடல் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை
    விடுத்தார் .

    முக்காலத்திற்கும் பொருந்தும் இந்த பாடல் -சமுதாய

    சிந்தனை பாடல் .விழிப்புணர்வோடு ஒவ்வொருவரும்

    எப்படி நடந்து கொள்ள வேண்டும் - வாழ வேண்டும்

    என்று மக்களுக்கு தன்னுடய படத்தில் , கருத்து பாடல்

    மூலம் சிறப்பாக நடித்து மக்கள் முன்னேற்றத்துக்கு

    அறிவுரை கூறிய மக்கள் திலகம் ஒரு பொற்கால சிற்பி -

    சமுதாய சிற்பி -ரசிகர்களுக்கு ஓர் அமுத சுரபி என்பதை

    உங்களின் இன்றைய பதிவு உணர்த்துகிறது .

    பொன்னான உங்களின் பதிவுக்கு நன்றி .

  7. #2936
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகமும் - குண்டுராவும்

    மக்கள் திலகத்தின் படங்களை பார்த்து ரசிகராக - பின்னர்

    மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற தலைவராக பணியாற்றி

    பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு தலைவராக உருவெடுத்து

    1980ல் கர்நாடக முதல்வராக பதவியேற்ற பெருமைக்குரியவர்
    திரு குண்டுராவ் அவர்கள் ஒரு முறை கூறிய பேட்டி

    ''1951ல் சர்வதிகாரி படத்தை பார்த்து எம்ஜிஆர் ரசிகனானேன் .

    பின்னர் மைசூர் -குடகு பகுதியில் எம்ஜிஆர் மன்றம் தொடங்கி

    அவரது எல்லா படங்களையும் பல முறை பார்த்து அவருடய

    தீவிர ரசிகனாக மாறினேன் .

    அவரது நடிப்பு - பாடல்கள் - சுறுசுறுப்பு - எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது . அவருடைய படங்களை பார்த்த பின்தான்
    அரசியலில் ஈடு பட வேண்டும் என்று எண்ணம் தோன்றி
    இன்று ஒரு மாநில முதல்வராக அமர்வதற்கு முழு காரணம்

    மக்கள் திலகம் என்று கூறியுள்ளார் .

    1970களில் மக்கள் திலகம் படங்கள் கர்நாடக மாநிலத்தில் படபிடிப்பு நடந்த நேரத்தில் திரு குண்டுராவ் பல ஒத்துழைப்பு
    கொடுத்துள்ளார் .
    மதுரையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் மக்கள் திலகம் அவர்கள் அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த திரு குண்டுராவை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து கௌரவ
    படுத்தினார் .

  8. #2937
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    தம்பி! நமது கலைச்செல்வர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்று சென்ற இதழிலே குறிப்பிட்டிருந்தேன், காண்கிறாயல்லவா, அவர்தம் கொடைத் திறனை!

    இன்று அந்த கலைச்செல்வர்கள், வைரம் மின்னிட, தங்கம் ஒளிவிட, தந்தக் கட்டிலில் அமர்ந்து வெள்ளி வட்டிலில் இனிப்புப் பண்டம் வைத்து உண்டு மகிழத்தக்க நிலை பெற்றவர். எனினும் அவர்களில் எல்லோருமே, இல்லாமை கொட்டுவதை, வறுமை வாட்டுவதை அனுபவித்து அறிந்தவர்கள். ஏழையின் இதயக் குமுறலை நன்கு தெரிந்தவர்கள். கருணை அவர்கள் உள்ளத்தில் நிச்சயம் சுரக்கத்தான் செய்யும். ஆகவே, அவர்களிடம் எனக்கு நிரம்ப நம்பிக்கை உண்டு. சென்ற கிழமை அவர்கள் கூடி நிதி திரட்டத் துவங்கினர்; துவக்கக் கட்டமே வெற்றி அளித்திருக்கிறது: தொடர்ந்து பணியாற்றுவர்; அவர்தம் பணியின் பலன், அழிந்தது போக மீதமிருக்கும் வலிவு கொண்டு வாழ்வுடன் போராடி, உழைப்பால் மீண்டும் பொலிவு பெறும் ஏழை எளியவருக்கான அழகிய குடில்களாகக் காட்சி தரட்டும், அழிவு தோற்றோடட்டும்! நாசத்தின் கோரப் பற்களால் ஏற்பட்ட புண் ஆற்றிடும் மாமருந்து கிடைக்கும்.

    நமது அருமருந்தன்ன நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன் மதுரையம்பதி கடைவீதியில் சென்று, கை ஏந்தி நின்று பணமும் பண்டமும் கேட்டும் பெற்று உதவினார் என்றோர் செய்தி கேட்டு, இத்தகு இதயம் படைத்தவரை, நண்பராகப் பெற்றிருக்கிறோமே, நமது கழகத்தினராகவும், கொண்டிருக்கிறோமே என்பது எண்ணிப் பெருமைப்படுகிறேன் - பெருமைப்படுகிறேன்.
    கலைச் செல்வர்களின் பணி, உண்மையிலேயே போற்றுதற்குரியதாகவே அமைந்திருக்கிறது.! "

    = வெள்ள நிவாரண நிதிக்காக கழகம் நிதி திரட்டியபோது , 18 - 12 - 1955
    திராவிடநாடு இதழில் அறிஞர் அண்ணா.


    Thanks Chandran Veersamy Facebook.

  9. #2938
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like


    ' ராஜா தேசிங்கு ' வெளிப்புறப் படப்பிடிப்பின் போது , தன்னைக் காண வந்த மக்களோடு , புரட்சி நடிகர் எம்ஜியார் , இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் , நடிகை பத்மினி .

    Thanks Chandran Veersamy Facebook.

  10. #2939
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    " புரட்சி என்றதும் பயந்து விடாதே, இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல. அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு; கொள்ளையடிப்போம் மக்கள் உள்ளங்களை. குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருள்களை! "

    Nadodi Mannan

  11. #2940
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    "நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.

    நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.

    எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.
    அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.

    அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.

    எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.
    தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.

    தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார் !

    = புலவர் புலமைப்பித்தன் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •