Page 193 of 401 FirstFirst ... 93143183191192193194195203243293 ... LastLast
Results 1,921 to 1,930 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1921
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் பற்றிய தங்களுடைய முகநூல் பதிவு அட்டகாசம் ராஜேஷ்ஜி.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1922
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி,

    இலங்கை வானிலையில் தனது தேன் மதுரக்குரலால் அனைவரையும் கவர்ந்த அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா அவர்களைப்பற்றி யாழ்சுதாகரின் பதிவு மிக மிக அருமை. அதனை இங்கே பதித்ததற்கு மிக்க நன்றி.சுதாகர் சொல்லியிருப்பது கொஞ்சமும் மிகையல்ல. மிகச்சாதாரண படத்துக்குக்கூட மிகச்சிறப்பாக விளம்பரம் தந்து, அந்தப் படத்தைப் பார்த்தேயாக வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதில் வல்லவர். படத்தில் வரும் வசனங்களை தனியே பதிவு செய்து, அதனுடன் தன் குரலையும் பொருத்தமாக இணைத்து சுவைபடத் தருவதில் அசகாய சூரர் கே.எஸ். ராஜா.

    அவரைப்பற்றிய பதிவைப்படித்து விட்டு, 'இப்போது கூடவே இன்னொரு தேன்குரல் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது பற்றிய பதிவையும் தந்தால் நன்றாக இருக்குமே' என்று நினைத்துக்கொண்டே தங்களின் அடுத்த பதிவைப் பார்த்தால் என்னவொரு ஆச்சரியம். அப்துல் ஹமீது பற்றிய பதிவு. அதுவும் நம்மவரை உள்ளடக்கி. கூடவே மயில்வாகனன் அவர்களின் புகைப்படமும்.

    அட்டகாசம் சார். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் கிருஷ்ணாஜி...

  4. #1923
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (70)

    'இன்றைய ஸ்பெஷலி'ல் 'வாழையடி வாழை' திரைப்படப் பாடல்.



    படம்: வாழையடி வாழை (1972)

    நடிகர்கள்: முத்துராமன், பிரமீளா, எஸ்.வி.ரங்காராவ், ஜி.வரலஷ்மி, ஷண்முக சுந்தரம், பி.ஆர்.வரலஷ்மி

    பாடல்கள்: உடுமலை நாராயண கவி, மருதகாசி

    இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

    தயாரிப்பு: சித்ரா புரொடக்ஷன்ஸ்

    கதை, வசனம், இயக்கம்: 'இயக்குனர் திலகம்' கே.எஸ்.கோபால கிருஷ்ணன்




    'இயக்குனர் திலகம்' பெருமையுடன் அறிமுகப்படுத்தும் டி.ஏ. பிரமிளா, ஆர்.வரலஷ்மி என்று டைட்டில் போடுவார்கள். இந்தப் பிரமீளா பின்னாட்களில் மிரள வைக்கும் படங்களில் நடித்து கதி கலக்குவார் என்று அப்போது யாருக்கும் தெரியுமா?



    அதே ரகம்தான் ஆர்.வரலஷ்மியும். பி.ஆர். வரலஷ்மி என்று இனிஷியலை மாற்றிக் கொண்டு 'வியாபாரம்' நடத்தினார்.

    தன் அழகின் மேல் அபார நம்பிக்கை வைத்திருக்கும் நாயகி திருமணம் செய்து கொண்டாலும் தன் அழகு கெட்டுவிடும் என்று கணவனை தன்னிடம் நெருங்க விடாமல் செய்கிறாள். பிள்ளை பெற்றால் அழகு குலைந்துவிடும் என்று நினைக்கிறாள். தன்னைவிட அந்தஸ்து குறைந்தவர்களை துச்சமாகத் தூக்கி எறிகிறாள். பிறந்த வீட்டாரையும், புகுந்த வீட்டாரையும் மதிக்காமல் மிதிக்கிறாள். இவ்வளவுக்கும் காரணம் அவள் அழகு. தன் சொந்த அக்காள் ஒரு சமையல்காரன் நொண்டியைக் கல்யாணம் பண்ணியதால் அவளைக்கூட உதாசீனப்படுத்துகிறாள். எல்லாரையும் அருவருப்போடு பார்க்கிறாள்.

    இறுதியில் அவளுக்கு அம்மை போட்டு அவள் அழகு பறி போகிறது. அழகு மட்டுமல்ல. வாழ்வும் பறி போகிறது. அவள் தங்கையே அவள் வாழ்வைப் பறிக்கிறாள். (அவளைத் திருத்தத்தான்)



    இறுதியில் புத்தி வருகிறது. எல்லோரும் சேர்ந்து அவளுக்குப் புத்தி புகட்டுகிறார்கள். முடிவு சுபம்.


    வழக்கமான இயக்குனர் திலகத்தின் படம். வளவள வசனங்கள், தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிடும், அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்படும் பாத்திரங்கள், அதிகப்படியான காட்சியமைப்புகள், திருந்தாத கேரக்டர்கள், அதைத் திருத்தப் பாடுபடும் நல்ல கேரக்டர்கள், திருந்தாத ஜென்மங்களுக்கு தண்டனை, நாடகமாடித் திருத்துவது, என்று அலுப்புத் தட்டுகிறது.

    வழக்கமான மாமனார் ரங்காராவ், வழக்கமான முத்துராமன், வழக்கமான சண்முகசுந்தரம், வழக்கமான ராகவன். வழக்கமான துடுக்கு ஜெயசித்ரா, வழக்கமான கே.எஸ்.கோபால கிருஷ்ணன்.

    அடங்காத குட்டிக் குதிரையாக பிரமிளா, கணவனாக முத்துராமன். இருவருக்கும் முதல் இரவு டூயட். சீர்காழி கோவிந்தராஜன் குரலில். நல்ல தமிழில். குன்னக்குடியின் டிரேட் மார்க் இசைப் பின்னணியில்
    காமத்துடன் நெருங்கும் நாயகன். அழகைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கும் நாயகி.




    நடிகர் திலகத்தின் 'செல்வம்' படப்பாடலான 'எனக்காகவா நான் உனக்காகவா' இப்படத்தில் முழுதும் இடம் பெறுவது தனிச் சிறப்பு. முத்துராமனும், பிரமீளாவும் 16 mm ஸ்க்ரீனில் புரஜெக்டர் மூலம் இப்பாடலைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவது போல காட்சிக்குப் பொருத்தமாக ஒரு காட்சி வரும். நம் உள்ளமெல்லாம் ஆனந்தக் கூத்தாடும்.

    அழகான தூய தமிழ் வரிகள். சீர்காழி அனுபவித்துப் பாடியிருப்பார். வார்த்தைகள் தெள்ளத் தெளிவாக வந்து கொட்டும் அருவியைப் போல. ஆனால் முத்துராமனுக்கு பொருந்தாது.

    'வாடாத பூமேடை நீயல்லவோ
    ஆடாத பொன்வண்டு நானல்லவோ'

    எனும் போது அலட்சியம் கொடிகட்டும். இந்தப் பாடல் பலர் விரும்பி நான் கேட்டிருக்கிறேன். சில பெரிசுகள் இந்தப் பாடலைக் கேட்டு சொக்கிப் போவார்கள். இப்போது அதிகம் வெளியே தெரியாத பாடல் என்றாலும் அப்போது ஹிட்தான்.




    இனி பாடலின் முழு வரிகள்

    ஆஹா! ஆஹா கற்பகத்தின் பூங்கொம்போ
    காமனது பெரு வாழ்வோ
    பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ
    புயல் சுமந்த விற்குவளை
    பவளமலர் நிறை பூத்த விற்கொடியோ
    பொற்பதமோ இது என்ன அற்புதமோ

    அங்கமெல்லாம் தங்கமோ
    மன்மதனாடும் சதுரங்கமோ
    அங்கமெல்லாம் தங்கமோ
    மன்மதனாடும் சதுரங்கமோ
    அங்கமெல்லாம் தங்கமோ

    செங்கனி இதழ் கோவையோ
    இல்லை.... இல்லை
    ஆ............................................ .ஆ
    செங்கனி இதழ் கோவையோ
    இல்லை தேன் சிந்தும் மலர் பாவையோ
    செங்கனி இதழ் கோவையோ
    இல்லை தேன் சிந்தும் மலர் பாவையோ

    அங்கமெல்லாம் தங்கமோ
    மன்மதனாடும் சதுரங்கமோ
    அங்கமெல்லாம் தங்கமோ

    வாடாத பூமேடை நீயல்லவோ
    ஆடாத பொன்வண்டு நானல்லவோ
    வாடாத பூமேடை நீயல்லவோ
    ஆடாத பொன்வண்டு நானல்லவோ
    ஆடவா பாடவா தேடவா
    நீ வா வா வா

    ஆடவா புதிய இசை பாடவா
    மடியில் இடம் தேடவா
    என்னருகில் நீ வா வா வா

    அங்கமெல்லாம் தங்கமோ
    மன்மதனாடும் சதுரங்கமோ
    அங்கமெல்லாம் தங்கமோ

    ஜாதி மல்லிப் பூவைக் கிள்ள
    சம்மதம் தாராயோ
    பாதியோடு பாதியாகி என்னைச் சேராயோ
    ஜாதி மல்லிப் பூவைக் கிள்ள
    சம்மதம் தாராயோ
    பாதியோடு பாதியாகி என்னைச் சேராயோ
    இடை மின்னவா நடை பின்னவா
    விடை சொல்லவா
    இருகரம் தழுவிட வா

    அங்கமெல்லாம் தங்கமோ
    மன்மதனாடும் சதுரங்கமோ
    அங்கமெல்லாம் தங்கமோ


    Last edited by vasudevan31355; 6th September 2014 at 10:44 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai liked this post
  6. #1924
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    நன்றி வாசு ஜி.
    தங்களின் பாராட்டுக்கு நன்றி. அதே போல் தம்பி பொண்டாட்டி பற்றிய பதிவிற்கான பாராட்டிற்குன் நன்றி.

  7. #1925
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாழையடி வாழை பற்றிய உங்கள் இன்றைய ஸ்பெஷல் அருமை .. எனக்கு பிடித்த படம். ஜெய்சித்ராவின் வேடம் நன்றாக இருக்கும்
    இசை இன்னும் கொஞ்சம் பிரமாதமாக இருந்திருக்கலாம். வ்ழக்கமான கே.எஸ்.ஜி படங்கள் போல் இல்லாமல் பாடல்கள் சுமார் ரகம் என என் அபிப்ராயம்

  8. #1926
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

  9. #1927
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குட்மார்னிங் ஆல்..

    முதன்முதலில் கண்ணில் பட்டது வாழைய்டி வாழை பாடல்..வாசு சார்..தாங்க்ஸ்..ராஜேஷ் ஜி சொல்லியிருப்பது போல் படம் சுமார் ரகம் பாடலிட்டதற்கு நன்றி..சீர்காழி கோவிந்தராஜன் குரல் தான் முத்துராமனுக்குப் பொருந்தவில்லை..பொருந்திய படம் அனுபவி ராஜா அனுபவி..

    மறுபடியும் பின்னோக்கிப் போய் வருகிறேன்

  10. #1928
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார்,

    தாங்கள் அளித்துள்ள 'ஹிந்து' நாளிதழின் நடிகை குமுதினி பற்றிய பதிவை ரசித்து படித்தேன்.

    அதில் ஒரு சிறு திருத்தம். 'சிவந்த மண்' திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் அம்மாவாக வருபவர் நடிகை சாந்த குமாரி. முத்துராமன் அம்மாவாக வருபவரே குமுதினி.
    நன்றி வாசு சார்
    இனிய காலை வணக்கம்
    நினைவு படுத்தியமைக்கு நன்றி
    ஹிந்து வலைப்பூவில் சு எ சு திரை படத்தில் நாகேஷ் வீ கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் சொல்வது போல் சொடேர் என்று பதில் போட்டு விட்டேன்

    ராஜேஷ் சார் உங்கள் முக நூல் தமிழ் அறிவிப்பாளர்கள் பற்றிய பதிவு
    மிக மிக அவதானித்து எழுதப்பட்ட பதிவு .ரசித்து படித்த பதிவு

    எஸ்வி சார்
    அருமையான வடகறி (உங்கள் பழைய ஆவணங்களை சொன்னேன் )
    அதில் உள்ள சமாச்சாரங்கள் எல்லாமே புதிய செய்திகள்

    கார்த்திக் சார்

    நன்றிகள் பல. நீங்களும் நமது மற்ற வாடிக்கையாளர்களும் இருக்கும் போது தைரியமாக கருத்துகளை பதிவிட முடிகிறது . தகவல்களில் தவறு இருந்தாலும் திருத்தி விடுகிறீர்கள் . மன்மத லீலை safire மிட்லண்ட் திரை அரங்கு பற்றிய உங்கள் திருத்தம் உங்கள் பண்பிற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு . அதே போல் பாராட்டும் போதும் வஞ்சனை இல்லாமல் பாராட்டுகிறீர்கள். வாசு சார் அவர்களின் குமுதினி சாந்த குமரி திருத்தமும் இந்த வகை தான். திரு மது அவர்களும்,ராஜேஷ் மற்றும் எல்லோருமே இப்படி பண்பில் சிறந்து விளங்குவதை பார்க்கும் போது 'என்ன தவம் செய்தோம் இப்படி ஒரு நட்பு கிடைக்க '
    gkrishna

  11. #1929
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அடங்காத குட்டி குதிரை பின்னாட்களில் மட்ட குதிரை

    இந்த படம் என் உடைய 12வது வயதில் நெல்லை பார்வதி திரை அரங்கில் கண்டு களித்த (கழிக்க முடியாத) நினைவு .50 நாட்கள் மேல் ஓடிய வெற்றி சித்ரம் ஜெயசித்ராவின் பூபைதிய பாடல் 'ரோஜா மொட்டும் மலர்ந்ததாம் மலர்ந்த பூவும் சிவந்ததாம் '
    அந்நாட்களில் நெல்லை சீமையில் எல்லா வீடுகளில் பூ புனித நன்னீராட்டு விழா பாடல் இது . .இன்னும் ஒரு பாடல் நினைவில் உண்டு
    'hallo ஸ்வீட்டி hallo அன்பும் நீ அமுதும் நீ ஸ்வீட்டி' என்று வரும் .பாடலை பாடியவர் தாராபுரம் சுந்தர்ராஜன் என்று நினைவு
    Last edited by gkrishna; 6th September 2014 at 11:32 AM.
    gkrishna

  12. #1930
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஈரோடு: நல்ல படங்களை ஆதரிக்குமாறும், ஆபாசப் படங்களைப் புறக்கணிக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பழம்பெரும் நடிகரான வி.எஸ்.ராகவன்.(30/09/2013)

    நேற்று, ஈரோட்டில் கொங்கு கலையரங்கில், கவிதாலயம் இசைப்பள்ளி மற்றும் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் சார்பில் பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    அப்போது, வி.எஸ். ராகவன் தெரிவித்ததாவது...
    அறிமுகம்....
    1954-ஆம் ஆண்டு வெளிவந்த "வைரமாலை' என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக நான் அறிமுகம் ஆனேன்.

    அப்பா கேரக்டர்....
    முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வருகிறேன். பெரும்பாலும் தந்தை கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறேன்.

    ஆரோக்கிய சினிமா....
    என்னைப் பொருத்த வரை சினிமா என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமே தவிர, ஆபாசமாக இருக்கக் கூடாது.

    ஆதரவும் புறக்கணிப்பும்....
    நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். ஆபாசப் படங்களை மக்கள் புறக்கணித்தால் மீண்டும் ஆபாசப் படங்களை தயாரிக்க அஞ்சுவார்கள்.

    திருப்தியான படங்கள்...
    நான் நடித்ததிலேயே, சவாலே சமாளி, வாழையடி வாழை ஆகிய படங்கள் எனக்கு திருப்தி தந்த படங்களாக அமைந்தன.

    நாகேஷால் வந்த நகைச்சுவை...
    திரையுலகில் நாகேஷுடன் பழகிய பிறகுதான் நகைச்சுவையாகப் பேசுவதைக் கற்று கொண்டேன்.

    சாகும் வரை நடிக்க ஆசை...
    எனக்கு இப்போது 89 வயதாகி விட்டது. சாகும் வரையிலும் நடித்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை எனத் தெரிவித்தார்.

    gkrishna

  13. Likes Russellmai, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •