Page 218 of 401 FirstFirst ... 118168208216217218219220228268318 ... LastLast
Results 2,171 to 2,180 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2171
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Nellore Kantha Rao
    நெல்லூர் காந்தாராவ்- தெலுங்குத் திரையுலகில் ஓர் அசோகன். வில்லன் மற்றும் துணைக்கதாபாத்திரங்களில் கலக்கியவர். இவருக்கு டைகர் என்ற பெரும் உண்டு. இப்பெயரைக்கொண்டு டைகர் புரொடக்*ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தைத் துவங்கி கிருஷ்ணாவைக் கதாநாயகனாகக் கொண்டு அசாத்தியாடு அகுண்டுடு மற்றும் ஸ்யேரா நா ராஜா, அல்லூரி சீத்தாராம ராஜு, சவட்டாயனு நேனு, வெல்லாகலிகிதே போன்ற படங்களையும் இவர் தயாரித்துமுள்ளார். தெலுங்கில் வெளிவந்த கிருஷ்ணாவுடன் நானன்றே நானே, அசாத்தியாடு அகுண்டுடு, அக்கினேனி நாகேஷ்வர ராவுடன் ஜமீன்தார், என்.ரி.ராமாராவுடன் மாயா பஜார், வீர அபிமன்யூ, பாண்டவ வனவாசம், நர்த்தனசாலா, போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தமிழில் குடியிருந்த கோயில் போன்ற சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய நான் திரைப்படம் தெலுங்கில் கருப்பு-வெள்ளைப் படமாக நானன்றே நானே என்ற பெயரில் 1968-இல் வெளிவந்தது. இப்படத்தில் எஸ்.ஏ.அசோகன் ஏற்று சிறப்பித்த வேடத்தை நெல்லூர் காந்தாராவ் ஏற்று நடித்திருந்தார்

    நானன்றே நானே [1968] படத்தில் கிருஷ்ணம் ராஜுவுடன் (தமிழ் நான் படத்தில் மனோகர் (சிங்காரம்) வேடத்தில் நடித்தவர்) நெல்லூர் காந்தாராவ் .


    குடியிருந்த கோயில் திரை படத்தில் ராஜஸ்ரீ உடன்


    அன்பே வா திரை படத்தில் இறுதி காட்சியில் மக்கள் திலகம் உடன் சண்டை காட்சி


    நான் படத்தின் பிரபல வசனம்

    சிங்காரம் ஆறு மாசமா ஆளையும் காணும் 6 லட்சத்தையும் காணும்

    பாஸ் அப்படியே வைச்சிருக்கேன் பாஸ்

    அப்படியே வைசுகலாம்னு பார்கிறியா

    gkrishna

  2. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2172
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    // நல்லதோர் வீணை செய்தே அதை
    நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ – உருக்கமான இந்தப் பாடல் பூர்ணம் வாயசைக்கும் போது இன்னும் உருக வைக்கும் – அந்த சூழ்நிலைக்கு த் தக்கபடி வந்த பாடல். //

    பாடலின் கடைசி பல்லவியில் மட்டுமே பூர்ணம் வாயசைப்பதைக் காட்டுவார்கள். வாய்பேச முடியாத ஓவியன் விபத்தில் இறந்துகிடப்பதில் துவங்கி, கமல் சம்மந்தப்பட்ட காட்சிகளினூடே பாடல் அசரீரியாகவே ஒலித்துக்கொண்டிருக்கும்.

    எஸ்.பி.பி. என்ன ஒரு குரல் வளம், குறிப்பாக அந்த உச்ச ஸ்தாயியில் வரும் ஆலாபனை, மற்றும் 'சொல்லடி சிவசக்தீ' என்ற நீட்டல். பிரமாதம்...

  5. #2173
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    காற்று வெளியிடை கண்ணம்மா
    உந்தன் காதலை எண்ணிக்களிக்கிறேன்
    அமுதூற்றினையொத்த இதழ்களும்

    இப்படி சொல்லிக்கொண்டே வந்த பாரதியார் ஓரிடத்தில்

    எந்தன் வாயினிலே அமுதூறுதே

    என்று சொல்லி விட்டு, 'அடடா அவளை அமுதூற்றினையொத்த இதழ்கள் என்று சொல்லி விட்டு, இப்போது எந்தன் வாயினிலே அமுதூறுதே என்று சொல்லலாமா' என்று உஷாராகி சமாளிக்கிறாராம்...

    எந்தன் வாயினிலே அமுதூறுதே
    (எப்போது தெரியுமா?)
    கண்ணம்மா என்ற பேர் சொல்லும்போதிலே

    - நெல்லை கண்ணன் அவர்கள் பேச்சிலிருந்து...

  6. Likes chinnakkannan, Russellmai, gkrishna liked this post
  7. #2174
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    // நல்லதோர் வீணை செய்தே அதை
    நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ உருக்கமான இந்தப் பாடல் பூர்ணம் வாயசைக்கும் போது இன்னும் உருக வைக்கும் அந்த சூழ்நிலைக்கு த் தக்கபடி வந்த பாடல். //

    பாடலின் கடைசி பல்லவியில் மட்டுமே பூர்ணம் வாயசைப்பதைக் காட்டுவார்கள். வாய்பேச முடியாத ஓவியன் விபத்தில் இறந்துகிடப்பதில் துவங்கி, கமல் சம்மந்தப்பட்ட காட்சிகளினூடே பாடல் அசரீரியாகவே ஒலித்துக்கொண்டிருக்கும்.

    எஸ்.பி.பி. என்ன ஒரு குரல் வளம், குறிப்பாக அந்த உச்ச ஸ்தாயியில் வரும் ஆலாபனை, மற்றும் 'சொல்லடி சிவசக்தீ' என்ற நீட்டல். பிரமாதம்...
    கார்த்திக் சார் /சி கே சார்
    அந்த பாட்டின் நடுவே
    ஒரு ஆப்பிள் கிடைத்து அதுவும் சாக்கடையில் விழுந்து கமல் அதை தேடி எடுத்து கழுவி சாப்பிட எண்ணி கடிக்கும் தருவாயில் எல்லா பட்டதாரிகளும் அதற்கு சண்டை போடுவது போல்

    wov பாலச்சந்தர்
    gkrishna

  8. Likes chinnakkannan liked this post
  9. #2175
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தமிழ்த் தாய் கண்ணீர் சிந்திய நாள் - 11.9.1921

    'நல்லதோர் வீணை செய்தே அதை
    நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ'

    பாடல் எழுதப்பட்ட பின்புலம்

    இந்த நாளில் என் பெரிய தம்பி இறந்துவிட்டான். இரண்டு வயதுக் குழந்தை. சாதாரண சீதபேதி; பலவித மருந்துகள் கொடுத்தும் குணம் அடையவில்லை; குழந்தை போய்விட்ட அதிர்ச்சியில் என் தந்தை மனம் இடிந்துவிட்டார். சுதேசிக் கப்பலுக்காகக் கணக்கற்ற பணம் கை விட்டுப் போனபோதும், 'இந்தியா’ பத்திரிகை நிறுத்தப்பட்ட போதும், அரசாங்கம் பல கொடுமைகள் செய்தபோதும் சளைக்காது தைரியமாகவே இருந்தார். இந்தச் சம்பவம் நோயாளியை மேல் எறிந்து கலக்கியதைப் போல் அவரை மிகவும் துர்ப்பலமாக்கிவிட்டது. இந்தத் துக்கம் வந்த சமயத்தில் ஐயர், பாரதியார் இருவரும் இடைவிடாமல் அவரோடு பேசிக்கொண்டும் சதுரங்கம் ஆடிக்கொண்டும் பகலைக் கழிப்பார்கள். சாயங்காலம் நாலு மணிக்கு அரவிந்தரின் வீட்டிற்குப் போய் வேதம் உபநிஷத் இவைகளைச் சிந்தனை செய்வார்கள். இரவு பத்து மணி, பதினொரு மணிக்கு வருவார்கள்.

    குழந்தை இறந்த அன்று அதை அடக்கம் செய்துவிட்டு இரண்டு மணிக்கு எல்லோரும் வீடு திரும்பினார்கள். பாரதியாருக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. வயிற்றில் மிகவும் சங்கடப்படுத்தியது. ‘கேட்பன’ என்ற தலைப்பில் நொண்டிச் சிந்து மெட்டில் ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலைப் பாடினார். குழந்தைகளான எங்களுக்கு அதைப் பாடிக் காட்டினார். - யதுகிரி அம்மாள், யதுகிரி நினைவுகள்

    யதுகிரி அம்மாள் என்று அறியப்படும் யதுகிரி பாரதி சில நினைவுகள் எனும் பாரதியார் குறித்த வரலாற்று நூலை எழுதியவர்.

    யதுகிரி புதுச்சேரியில் சுதேசிகளுக்கு உதவி வந்த மண்டையம் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார் அவர்களின் புதல்வி. இவர் தான் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு இந்தியா பத்திரிக்கையை ஆரம்பித்தவர். யதுகிரி பாரதியின் வீட்டில் மூன்றாவது குழந்தையாகவே கருதப்பட்டார். பாரதியார் அடிக்கடி யதுகிரியின் வீட்டிற்கு வருவார். அப்போது தான் எழுதிய பாடல்களைப் பாடிக்காட்டுவார். அவற்றை யதுகிரி தனது குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொள்வார். இப்படியாக பாரதியின் பாடல்களும் அவை தோன்றிய சூழல் குறித்தும் யதுகிரி அம்மாள் நன்றாக அறிந்திருந்தார். 1939 ஆம் ஆண்டு பாரதி சில நினைவுகள் எனும் நூலை யதுகிரி எழுதினார். ஆனால் எழுதப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்த பின்னே இந்நூல் வெளியானது. அதைப்பார்க்க யதுகிரி அம்மாள் உயிருடன் இல்லை.
    gkrishna

  10. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  11. #2176
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இந்த பதிவை அனுப்பி தந்த நண்பர் எஸ் பி காந்தன் (ஜெர்ரி பட இயக்குனர்)
    அவர்களுக்கு நன்றி

    என் கணவர் - திருமதி. செல்லம்மாள் பாரதி
    (1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

    வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.

    ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.

    உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
    கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

    வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

    கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.

    அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
    கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

    கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

    காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

    அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

    சிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!
    இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

    புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

    புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

    புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.
    மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

    மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.

    தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
    gkrishna

  12. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  13. #2177
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    படித்ததில் பிடித்தது - அபசகுனம்

    நான் இது போன்ற சென்டிமென்ட்கள் பார்க்கிறவனல்லன். உதாரணமாய், ஒரு படத்துக்கு எங்கள் ஆபீசிலேயே பூஜைக்கு நேரம் குறித்திருந்தோம். ஆபீசில் இருந்த கடவுள் படங்களையே படம் பிடித்து படத்தை ஆரம்பிப்பதாக ஏற்பாடு. குழந்தை தெய்வத்திற்குச் சமமில்லையா..? யாராவது ஒரு சிறு குழந்தையை வைத்து கேமிராவை இயக்குவது என்ற என் வழக்கப்படி கேமராமேன் வின்சென்ட்டின் மகன் ஜெயனன் கேமராவை இயக்க வேண்டும்.

    ஆனால் திடீரென்று பட்டனை அழுத்த மாட்டேன் என அவன் அடம் பிடிக்க, நாங்கள் அவனைக் கட்டாயப்படுத்த அவனோ அழ ஆரம்பித்துவிட்டான். கடைசியில் அவன் விரலை வின்சென்ட் கேமராவில் பதித்து கேமராவை இயக்கினார்.

    வின்சென்ட்டின் மகன் பண்ணின கலாட்டா போதாதென்று அடுத்தபடியாய் கற்பூரம் ஏற்றிக் காட்டியபோது கரெண்ட் கட். மறுபடியும் அபசகுனமா என்ற முணுமுணுப்பு என் காது படவே கேட்டது.

    நான் இதைப் பெரிதுபடுத்தாவிட்டாலும் கோபு மனம் வாட்டமுற்றது. இதற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம். எனக்குக் கதை மீது நம்பிக்கை இருக்கிறது என்று அவரைச் சமாதானப்படுத்தினாலும் அவருக்கு முழு திருப்தியில்லை. வேண்டுமானால் பாடல் பதிவின்போது ஒரு சின்ன பூஜைக்கு ஏற்பாடு செய்து விடலாம்.. என்றேன். அதன்படியே சாஸ்திரிகளை வைத்து நேரம் குறித்து ஒரு பூஜையும் ஏற்பாடாகியது.

    மறுபடியும் பிரச்சினை. குறிப்பிட்ட நாளில், பூஜை நேரத்துக்கு வர வேண்டிய ஐயர் ஏனோ வரவில்லை. எம்.எஸ்.வி.யின் குழுவில் இருந்த பிராமணர் ஒருவரை வைத்து பூஜையை முடித்துட்டு குறித்த நேரத்தில் பாடல் ரிக்கார்டிங்கை தொடங்கினோம்.

    படத்தின் முதல் காட்சியாக ராஜஸ்ரீ நடிக்கும் பாடல் காட்சி.. அனுபவம் புதுமை பாடல் படம் பிடிக்கத் தயாராகி, ஸ்டார்ட் சொன்னதும், கேமராவில் பெல்ட் ஒன்று அறுந்துபோக ஷூட்டிங் தடைபட்டது.

    அபசகுனம் என கருதப்பட்ட அத்தனை தடைகளையும் மீறி அந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. அதுதான் காதலிக்க நேரமில்லை.

    புத்தகம் : திரும்பிப் பார்க்கிறேன் சொன்னவர் இயக்குநர் ஸ்ரீதர்

    gkrishna

  14. Likes Russellmai liked this post
  15. #2178
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இசைஞானி இளையராஜாவின் தெய்வீகக் கானங்களில் ஒன்று தர்மயுத்தம் திரைப்படத்தின் பாடலான ஆகாய கங்கை பாடல். அந்தப் பாடலை தனிமையில் வெறும் பாடலாகக் கேட்கும்போதெல்லாம் மனதில் எதையோ செய்கிறது.

    பாடலின் துவக்கத்தில் வரும் ஜானகியின் ஹம்மிங் வாய்ஸை கேட்டவுடன் அதற்குள் நம்மை ஈர்க்க வைக்கிறது. இவ்வளவு அருமையான பாடலை திரைப்படத்தில் பார்த்தபோது சப்பென்று இருந்தது.

    ரேஸ்கோர்ஸ் மைதானத்திலேயே முழுக்க முழுக்க ஷூட் செய்யப்பட்டிருக்கும், இந்தப் பாடல் காட்சி பாடலின் தரத்தை வெகுவாகக் குறைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பாக இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.சி.சக்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பாடல் பற்றிய எனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் சொன்ன விஷயம் திரைப்படத் துறையில் இருக்கும் சங்கடங்கள், சில விட்டுக் கொடுத்தல்கள், பிரச்சினைகள் பற்றி எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்தது.

    இந்த ஒரு பாடலை மட்டும் விட்டுவிட்டு மற்ற போர்ஷன்கள் அனைத்தையும் முடித்துவிட்டாராம் சக்தி ஸார்.. இந்த ஒரு பாடலையும் முடித்துவிட்டால் போதும் என்கிற நிலை இருக்கும்போது ரஜினியும், ஸ்ரீதேவியும் மிக மிக பிஸியாக இருந்திருக்கிறார்கள். ஒருவர் டேட் கிடைத்தால் இன்னொருவரின் டேட் கிடைக்காமல் போகிறது. இப்படியே ஒரு மாதம் முழுக்க கண்ணாமூச்சி நடந்திருக்கிறது.

    எப்படியோ இருவரிடமும் ப்ரீயான டேட்களைக் கேட்டபோது தொடர்ச்சியான இரண்டு, மூன்று நாட்கள் கிடைக்கவே இல்லையாம். சரி விட்டுவிட்டு எடுத்துவிடலாம் என்றெண்ணத்தில் பாடல் காட்சிகளை ஊட்டியில் எடுப்பதற்காக பிளான் செய்திருக்கிறார் சக்தி ஸார்..

    ஆனால் அதற்குள்ளாக ஸ்ரீதேவிக்கு தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கின் போது காலில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் மாஞ்சா கட்டுபோட்டு படுத்துவிட்டாராம். ரஜினியை அந்தத் தேதியில் விட்டுவிட்டால் மீண்டும் ஒரு மாதம் கழித்துத்தான் பிடிக்க முடியும் என்ற நிலைமை வந்துவிட.. தயாரிப்பு தரப்பு சக்தி ஸாரை போட்டு நெருக்க.. என்ன செய்வது என்ற குழப்பமாகிவிட்டதாம்.

    இதன் பின்புதான் ஷூட்டிங்கை ஒரே நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ரஜினியிடம் ஓகே வாங்கியிருக்கிறார். மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீதேவியிடமும், அவரது அம்மாவிடமும் பேசி வேறு வழியில்லை. வந்தே தீரணும்.. என்று கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்தார்களாம்.

    ஸ்ரீதேவியின் காலில் போட்டிருந்த மாவுகட்டு வெளியே தெரியக் கூடாது என்பதால் சேலை அணிவித்தும், அவரை உட்கார வைத்தும், ரஜினியால் தூக்க வைத்தும், ஸ்ரீதேவியின் சிற்சில சிங்கிள் ஷாட்டுகளையும் வைத்தும் பாடல் காட்சியை முடித்துவிட்டாராம் சக்தி ஸார்.

    முழுக் கதையையும் சொல்லி முடித்துவிட்டு, எனக்கும் அந்தப் பாடலை இப்படி அவசரக்கதியாக படமாக்கியதில் திருப்தியில்லைதான் தம்பி.. ஆனா வேறென்னெ செய்றது..? படத்தை சொன்ன தேதில ரிலீஸ் செஞ்சாகணும்.. தயாரிப்பாளரையும் பார்க்கணும்ல..? என்றார் சக்தி ஸார்.

    காவியமாக படைத்திருக்க வேண்டியது.. வியாபாரச் சூழலால் இப்படி கற்பிழந்து போனது..!!!

    (உண்மை தமிழன்-நன்றி )



    gkrishna

  16. Thanks chinnakkannan, Russellmai thanked for this post
  17. #2179
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    படித்ததில் பிடித்தது - ஈகோ

    பட்டிக்காடா பட்டணமா என்கிற படத்தில் இதே சிவாஜி-ஜெயலலிதா ஜோடி நடித்துக் கொண்டிருந்தார்கள். இதன் இயக்குனர் நண்பர் மாதவன் அவர்கள் அந்தக் காலத்தில் பெரிய ஹிட் பாடலாகக் கருதப்பட்ட கேட்டுக்கோடி உறுமிமேளம் என்கிற பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது.

    இந்தப் பாடலைப் பற்றி ஒரு சுவையான தகவல் உண்டு. பாடலுக்கான கம்போஸிங் ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதினார். கேட்டுக்கோடு உறுமிமேளம் என்கிற பல்லவியைத் தந்துவிட்டு கவிஞர் அடுத்த வரியை யோசித்துக் கொண்டிருந்தார்.

    மாதவன் படப்பிடிப்புக்காக செட்டுக்கு போயிருந்தார். பாடலின் முதல் வரியை மாதவன் படப்பிடிப்பில் இருந்த ஜெயலலிதா அவர்களிடம்கூற உடனே அவர் போட்டுக்கோடி கோ கோ தாளம் என்று அடுத்த வரியைச் சொன்னார்.

    உடனே மாதவன் ஓடி வந்து கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரிடம் செல்வி ஜெயலலிதா கூறிய வரிகளை கூறியுள்ளார். கவிஞர் கண்ணதாசனுக்கு ஈகோ பிரச்சனை என்றுமே இருந்ததில்லை. ஆகவே நன்றாக இருக்கிறது என்று கூறி உடனே அதனை ஏற்றுக் கொண்டுவிட்டார்.

    அது மட்டுமன்றி உடனே பாடலின் மற்றப் பகுதிகளையும் மளமளவென்று முடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் கவிஞர். படம் வெளியானதும் இந்தப் பாட்டு பெரிய ஹிட் ஆனது அனைவரும் அறிந்த கதை.

    (தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு இரண்டாம் பாகம் என்கிற நூலில் இயக்குநர் முக்தா சீனிவாசன் எழுதியிருப்பது.)



    gkrishna

  18. Likes Russellmai liked this post
  19. #2180
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    பல அபூர்வமான சினிமா செய்திகள் - புது தகவல்கள் .அருமை

    .
    வாகனங்களும் அதில் இடம் பெற்ற பாடல்களும்

    மாட்டு வண்டி - பாரப்பா பழனியப்பா
    குதிரை வண்டி - நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
    ஜீப் - உள்ளம் ரெண்டும் ஓடும் வேகம்
    கார் - பல பாடல்கள்
    டிராக்டர் - விவசாயி விவசாயி ....
    கப்பல் - அதோ அந்த பறவை போல
    படகு - நான் அனுப்புவது கடிதம் அல்ல
    பேருந்து - பயணம் எங்கே ...

    ரயில் அந்தி நேர மஞ்சள் காற்று
    விமானம் ஓ மானிட ஜாதியே
    ஹெலிகாப்டெர் குரு படத்தில் இடம் பெற்ற பாடல் .

  20. Likes chinnakkannan, gkrishna liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •