கவிஞர் வாலி-18th July- Memories

வாலியின் மிக சிறந்த வரிகள்.

தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்.

கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே. பொங்கி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே.

மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்

முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக

முக்கனிக்கும் சர்க்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ

நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்

கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ

மாளிகையே அவள் வீடு மரகிளையில் என் கூடு

மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

வான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால் ,பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்,வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ





எங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .

எங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .

நானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த?.)

1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.

2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)

3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.

4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.

5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.

வாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.

ஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.

M .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்!!)

இப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.

வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .