Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    "சிவகாமியின் செல்வன்"

    'சிவகாமியின் செல்வன்' நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள மிகவும் ரம்மியமான படங்களில் இதுவும் ஒன்று. ஆகா... என்ன அருமையான படம். துவங்கியது தெரியாமல், முடிந்ததும் தெரியாமல் அவ்வளவு அழகு, ரம்மியம், உற்சாகம் அனைத்தும் நிறைந்த படம். நடிகர்திலகம் பின்னியிருப்பார். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். 'என்ன இந்தப்படத்தை அருமையான படம்னு சொல்கிறாளே' என்று நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கே புருவம் உயரலாம். என்னுடைய பதிவுகள் பலவற்றைப்படித்த நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம், நான் என்ன விதமான சிவாஜி ரசிகை என்று

    என்னுடைய HERO முதலில் அழகாக இருக்க வேண்டும். இளமையாக இருக்க வேண்டும், ஒல்லியாக அல்லது சற்று பூசினாற்போன்ற உடலமைப்புடன் இருக்க வேண்டும்.

    நான் எப்போதும் விரும்பும் ஒல்லியான நடிகர்திலகம். அதன்காரணமாக சிக்கென்று பொருந்தும் அனைத்து உடைகளும். கொள்ளை அழகு. முழுக்க முழுக்க பாடல்களினாலேயே பிரபலமான ஆராதனாவின் ரீமேக் என்றபோதிலும், ஒரிஜினல் மெட்டில் ஒரு பாடலைக்கூட தொடாமல், அதே சமயம் அத்தனை பாடல்களையும் அட்டகாசமாக சாதித்துக்காட்டிய மெல்லிசையின் இமயம் எம்.எஸ்.வி.யின் அற்புதப்பாடல்கள்...
    'உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்னம் ஓடும் வேகம்'
    'இனியவளே என்று பாடி வந்தேன்... இனி(ய்)அவள்தான் என்று ஆகிவிட்டேன்'
    'மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருகவென்று'
    'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது.. எப்படி மனதை தட்டிப்பறிக்குது'
    'எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே'
    'என் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் சிரிக்கும்'
    'ஆடிக்குப்பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு'

    நடிகர்திலகம் இரட்டை வேடங்களில் கலக்கியிருப்பார். அதிலும் மகன் ஆனந்த், தன் தாய் சிவகாமி(வாணி)யை அடையாளம் கண்டுகொண்டபின் அவரிடம் காட்டும் அந்த பரிவு.

    இணைந்து நடித்தது ஒரே படமென்றாலும் நடிகர்திலகத்துடன் லதாவின் கெமிஸ்ட்ரி, பயாலஜி, பிஸிக்ஸ், மேத்ஸ், நேச்சுரல் சைன்ஸ் எல்லாமே அட்டகாசம்.

    நான் எப்போதுமே நடிகர்திலகத்தின் 'பதினைந்து பட வட்ட'த்துக்குள் சிக்காதவள் ஆதலால் ரொம்பவே ரசித்தேன். நடிகர்திலகத்தை அழகாகக் காண்பித்து என்னைப்போன்றவர்களின் ஆவலைப்பூர்த்திசெய்யவே அவதாரம் எடுத்த சி.வி.ராஜேந்திரன் இயக்கம்.


    'ஆராதனா' ஓடியதற்கான காரணங்கள் அவற்றில் இடம்பெற்ற அருமையான பாடல்களும். அப்படத்தில் ராஜேஷ் கன்னா புதுமுகம் என்பதுமே. ராஜேஷ் ஷர்மிலா தாகூர் இணை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

    கதை சிறிய கதை மட்டுமல்ல, எந்தவிதமான பெரிய திருப்பங்களும் இல்லாத கதையும் கூட. கிட்டத்தட்ட சென்னை மற்றும் பெரு நகரங்களில் மட்டுமல்ல இடைப்பட்ட சிறு நகரங்களில் கூட ஆராதனா நன்றாக ஓடியிருந்த வேளையில், படத்தின் கதை என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும் பாடல்களே அப்படத்தை தூக்கி நிறுத்தியிருந்ததால், தமிழில் மெல்லிசை மன்னர் எப்படி செய்திருக்கிறார் என்பதையும், இளமைத்துடிப்புள்ள (குறிப்பாக பையன் ரோல்) நடிகர்திலகம் எப்படி செய்துள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக இருந்தனர்.

    ஆனால் மெல்லிசை மன்னர் யார்?. அசகாய சூரராச்சே. 'உன்னுடைய ஒரிஜினல் ட்யூன்களை நீயே வைத்துக்கொள். கதைக்கும் காட்சிக்கும் ஏற்றவாறு நான் போடுகிறேன் பார் ட்யூன்' என்று, ஒவ்வொரு பாடலுக்கும் நிகராக மெட்டு போட்டிருந்தார் பாருங்கள். ரசிகர்கள் அதிசயித்துப்போயினர். என்னடா இது, இப்படத்தில் மெல்லிசை மன்னர் இன்னொரு 'வேதா'வாக மாறுவார் என்று பார்த்தால், நான் நான்தான் என்று காட்டிவிட்டாரே என்று ஆச்சரியத்தில் மூழ்கினர்.

    'Mere sapnom ki rani' பாடலுக்கும் 'உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று' பாடலுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கிறததா...

    'Kora kagaz ka ye man mera' பாடலுக்கும் 'இனியவளே என்று பாடி வந்தேன்' ட்யூனுக்கும் எந்த வகையிலாவது சம்மந்தப்படுத்த முடியுமா. இதே போல

    'Gungugna rahe' பாடலின் இடத்தில் 'மேள தாளம் கேட்கும் காலம்' பாடலையும்,
    'Chanda he thum' பாடலின் இடத்தில் 'என் ராஜாவின் ரோஜா முகம்' பாடலையும்

    எல்லோரும் எதிர்பார்த்த
    'Roppu thera masthana' படல் காட்சியில் 'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது பாடலையும் ஒரிஜினல் இந்தி சாயல் கொஞ்சமும் இல்லாமல் தன் வழியில் ('என் வழி தனி வழி என்று ') மெட்டமைத்து அசத்தியிருந்தார்.

    அதுபோலவே, எஸ்.டி.பர்மன் பாடியிருந்த சிச்சுவேஷன் பாடலைவிட, தன் குரலில் “எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே” பாடலை ஒருபடி மேலே தூக்கி நிறுத்தியிருந்தார் மெல்லிசை மன்னர். சுசீலாவின் தனிப்பாடலான 'என் ராஜாவின்' பாடலும், இந்திப்பாடலைவிட அருமை.

    நடிகர்திலகத்தைப் பொறுத்தவரை, இளமை இயக்குனரோடு சேர்ந்து அட்டகாசம் பண்ணியிருப்பார். இரண்டு ரோல்களுக்கும் நல்ல வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். (ஆரதனாவில் மீசை மட்டுமே வித்தியாசம்).

    சென்னை லிட்டில் ஆனந்த் திரையிடப்பட்ட ‘ஆராதனா’, அங்கே 50 வாரங்களைக்கடந்த பின்னர், நகரின் பல்வேறு தியேட்டர்களில் தொடர்ச்சியாக மாறி மாறி திரையிடப்பட்டு 99 வாரங்கள் கழிந்த பின்னர் மீண்டும் 100-வது வாரமாக அதே லிட்டில் ஆனந்தில் திரையிடப்பட்டபோது மீண்டும் கூட்டம் அலை மோதியது. (தியேட்டர் அமைந்திருந்த அண்ணாசாலைப்பகுதி கல்லூரி வளம் செறிந்த இடம்). இதே காலகட்டத்தில் இதன் அருகேயிருந்த எமரால்ட் தியேட்டரில் 'அந்தாஸ்' இந்திப்படம் 30 வாரங்கள் சக்கை போடுபோட்டது.

    அன்றைய காலகட்டத்தில் தமிழ்ப்படங்கள் தமிழ்நாட்டில் ஓடி சில மாதங்கள் கழித்துத்தான் இலங்கையில் திரையிடப்படும். 'சிவகாமியின் செல்வன்' தமிழ்நாட்டில் ஓடி முடிந்து எடுக்கப்பட்ட பின்னர்தான் இலங்கையில் திரையிடப்பட்டது. எந்த ஒரு படத்தையும் அற்புதமாக அறிமுகம் செய்வதில் இலங்கை வானொலிக்கு நிகர் எதுவும் கிடையாது. அந்த வகையில் இலங்கை வானொலியில் கே.எஸ்.ராஜா இப்படம் பற்றிய சிறப்பம்சங்களைத் தொகுத்து வழங்கிய அழகைக்கேட்ட தமிழ்நாட்டினர், சிவகாமியின் செல்வனைப்பார்க்காமல் விட்டதற்காக வருந்தி, பார்க்கத்தேடியபோது it was too late. ஏனென்றால் அப்போதெல்லாம் படங்களை தியேட்டரில் பார்ப்பதல்லாமல் no other choice.

    உங்களுக்கே தெரியும். நான் 1967 - 77 படங்களைப்பற்றிப் பேசுவதென்றால் என்னையே மறந்து விடுவேன். அந்த வகையில் சிவகாமியின் செல்வனைப்பற்றி இன்னும் நிறையப்பேச வேண்டும். பேசுவோம்.....

  2. Thanks sss, ifohadroziza, Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •