Results 1 to 10 of 260

Thread: Ilaiyaraja's New Albums 2016-18, News and Titbits

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by dochu View Post
    Kodumai!!!!!

    As I was enjoying the clip, right at 5:52 - IR scolded his tabla player for starting out wrong (in public!!!).
    Song was more on a philosophical note, but the manner he dealt with a mistake isn't.
    Rather than treating it lightly, correcting it and move on (infact, he could have made a comedy or something to distract the public from knowing the mistake) - he chose the wrong path.

    Nobody is perfect in this world. It isn't a surgery that led to kill a patient by mistake!
    I literally stopped watching few seconds after that.

    Sad!!!
    அடேங்கப்பா!

    நன்னடத்தை விதிகளை கடைபிடித்துக்கொண்டு, நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் எல்லா நேரத்திலும் அரவணைத்து சென்றுகொண்டிருந்தால் ராஜா ஒருவேளை இந்த அளவுக்கு ஆக்கங்களை எட்டாமல் இருந்திருக்கக் கூடும்.

    ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு தனது கண்டிப்பை வெளிப்படுத்தனும் என்பது வேறுபடும். அதுவும் இசைக்கலைஞர்கள் மற்றவர்கள் போல அல்ல. அவர்களுக்கென்று பல பிரத்யேக நற்குணங்களும், கறாரான கண்டிப்பு, அரவணைப்பு எல்லாமே ஒருங்கே அமைத்திருக்கும் கலவையைத்தான் காணமுடியும். எல்லாமே நமக்கு பிடிக்கும் விதத்தில் அமையனும் என ஜட்ஸ்மென்ட் செய்துகொண்டிருந்தால் கடைசி வரை பச்சை இங்க் வைத்துக்கொண்டு மதிப்பெண் வழங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

    இந்தக் காணொளியை காணும் எல்லாருமே கவனிக்க வேண்டியது.. இதுபோன்ற உருக்கமான பாடல்களை பலர் பார்த்துக்கொண்டிருக்கும் அரங்கங்களில் இசைப்பது, பாடுவது எல்லாமே இயல்பான ஒன்றல்ல. அதுவும் ராஜாவின் பாடல்களில் ராஜாவே இதுபோல உருக்கமாக பாடி ரசிகர்களுக்கும் அவருக்கும் பாடல்களின் வரிகளின் வழியே உறவுப் பாலத்தை கட்டிக்கொண்டிருக்கையில் இதுபோன்ற தடங்கல்கள் ஒரு முனிவரின் கடுந்தவத்தை கல்லெறிந்து கலைப்பதற்கு ஒத்தது. இன்னொருமுறை காணொளி பார்க்கவும். அந்த தபேலாக் கலைஞரின் தவறுக்கு பாடலின் இடையிசையிலேயே அவரிடம் ராஜா உணர்த்துகிறார். அதை உணர்ந்து, இன்னொரு முறை அந்தத்தவறை செய்யாத வண்ணம் திருத்திக்கொள்ளாதது தபேலாக்காரரின் தவறே. அத்தகைய உணர்ச்சி பொங்கும் பாடல் அது. அதனாலேயே ராஜாவிற்கு அந்த தருணத்தில் அத்தகைய கோபம் வெளிப்பட்டது.

    ராஜாவின் வெற்றிக்கு பெரும்பங்கு.. இசையில் உன்னதத்தை எட்டும்வகையில் முடிந்த அளவு சாமரம் செய்துகொள்ளாத அவரது ஓயாத முயற்சியும், அதையொட்டிய இன்னமும் மாறாத கண்டிப்புத்தன்மையும்தான்.
    Last edited by venkkiram; 4th October 2016 at 07:50 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •