Results 1 to 10 of 2498

Thread: Maestro Ilaiyaraja New Albums 2011 - Hello Jaihind / Sri Rama Rajyam

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber rajasaranam's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Raja's Music World
    Posts
    2,571
    Post Thanks / Like

    இசைஞானியின் இசையில் கரைந்த 'தாண்டவக்கோன&

    http://www.koodal.com/tamil/movies/hotnews/7213/thandavakone-with-isaignani-ilayaraja-s-mesmerising-music
    நீரால் உடல் கழுவி நித்த நித மூவேளை சோறால் குடல் கழுவும்... ஏதோ பட்டினத்தார் எழுதிய பாடல் போல தோன்றும் இப்பாடலை இசைஞானி இளையராஜாதான் எழுதியிருக்கிறார். பாடல் இடம் பெற்ற படம் 'தாண்டவக்கோனே'! இந்த ஒரு பாடலை பார்க்கும் பாக்கியம் நமக்கும் கிடைத்தது. 'பாக்கியம்' என்றெல்லாம் பெரிய வார்த்தையை உபயோகிப்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், பாடல் எப்படியிருக்கும் என்று! படத்தில் இடம் பெறும் எல்லா பாடல்களையும் படமாக்கிய பின்பே எழுதி இசையமைத்திருக்கிறார் இளையராஜா. பொதுவாகவே அம்மா சென்ட்டிமென்ட் என்றால் கரைந்து விடுவார் இளையராஜா. இதில் சிவனை வணங்கும் அம்மாவின் மரணம் வேறு. மனசில் விழுந்து அழுகையும் ராகமுமாக கரைந்திருக்கிறார் இசைஞானி. சீமானிடம் உதவி இயக்குநராக இருந்த சுப்பு சுஜாதா இயக்கியிருக்கும் இப்படம், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கக்கூடும். சிவன் கோவில் வாசலே கதி என்று கிடக்கும் அம்மா, தன் மகனுக்கு சொல்லும் அறிவுரைகள் எல்லாமே அவனால் புறக்கணிக்கப்படுகிறது. அம்மா இறந்தபின் அவள் சொன்ன எல்லாமே அவனுக்கு புரிய வருகிறது. அதற்கப்புறம் அவன் என்ன செய்தான் என்பதை 'பாலாவின் டச்'சோடு சொல்லியிருக்கிறார் சுப்பு சுஜாதா. 'கோன்' என்றால் சிவன், 'தாண்டவம்' என்றால் ஆட்டம். சிவனின் ஆட்டத்தைதான் இப்படி தலைப்பாக வைத்திருக்கிறார் சுப்பு சுஜாதா. அதற்காக இது பட்டையை கிளப்பும் பக்தி படம் என்று கருதிவிட வேண்டாம். அருமையான காதல், அற்புதமான சென்ட்டிமென்ட், அதிர வைக்கும் ஸ்டண்ட் என்று எல்லா ஏரியாவையும் டச் பண்ணியிருக்கு என்கிறார் சுப்பு சுஜாதா. சஞ்சய், நந்தகி இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். சுளையாக சம்பளம் தந்து கொண்டிருந்த வங்கி வேலையை விட்டு விட்டு, கலைக்காக சினிமாவுக்கு வந்திருக்கிறார் சுப்பு சுஜாதா. சினிமா மீது தீராத காதலோடு ஃபிளைட் ஏறியிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரும் துபாய் தொழிலதிபருமான பிரபாகர் சீனிவாசகம். இவர்களின் வருகை ரசிகர்களை 'ஆனந்த தாண்டவமாட' வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மனச கரச்சிடுவீங்களே.......

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. TAMILAR' GOD RAMA
    By devapriya in forum Indian History & Culture
    Replies: 87
    Last Post: 10th December 2014, 03:01 PM
  2. Ilaiyaraja Albums - Best Tracks - Poll
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd August 2008, 12:23 PM
  3. I Met Maestro Ilayaraja
    By sivakumarann in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 29
    Last Post: 13th November 2006, 11:06 PM
  4. Bombay Jayashree's RAMA album
    By Umesh in forum Indian Classical Music
    Replies: 0
    Last Post: 13th March 2005, 07:58 AM
  5. SIVAN + RAMA = SEEVA HAREE
    By kandiban in forum Current Topics
    Replies: 1
    Last Post: 30th January 2005, 04:11 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •