செல்வ மகள் திரைப்படத்திலிருந்து ஓர் இசைக் கோப்பு

துவக்கத்தில் கணவரான மேஜர் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து கடல் கடந்து போவதும் அதனைத் தொடர்ந்து மனைவி வீட்டை விட்டு வெளியேறி, குழந்தையை அநாதையாக விட்டு விட்டு தற்கொலைக்கு முயல்வதும் பின்னர் அதன் அழுகுரல் கேட்டு திரும்ப ஓடி வந்து பார்க்கும் போது குழந்தையைக் காணாமல் துடிப்பதுமாக காட்சி. இதனைத் தொடர்ந்து படத்தின் முகப்பிசை இடம் பெறும்.

இந்த இசைக் கோப்பினைத் தான் நாம் கேட்க இருக்கிறோம். இதில் மேஜரின் மனைவியாக வரும் பண்டரிபாய் குழந்தையைக் கோவில் வாசலில் கிடத்தி விட்டு தற்கொலைக்காக மலை உச்சியில் ஏறும் போது வயலின் உச்ச ஸ்தாயியில் ஒலிப்பதும், பின்னர் குழந்தையின் அழுகுரல் கேட்டு இறங்கி ஓடி வரும் போது அதனை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வேகமாக வயலினிசை ஒலிப்பதும் அந்தக் காட்சியைக் கண் பார்வையற்றோரும் உணரும் வண்ணம் அமைத்திருப்பார் மெல்லிசை மன்னர். தமிழகத்திற்கு இறைவன் கொடுத்த இன்னொரு பொக்கிஷம் எம்.எஸ்.வி. இந்த இசையும் அதற்குக் கட்டியம் கூறும்.

http://www.mediafire.com/?gm17oeb08zik67h