Page 94 of 401 FirstFirst ... 44849293949596104144194 ... LastLast
Results 931 to 940 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #931
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,495
    Post Thanks / Like
    but it has its moments... many of them.
    some scenes can be seen again and again with amazement!
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #932
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,495
    Post Thanks / Like


    Tech-enhanced Thiruvilayadal toast of film-goers

    Following the phenomenal success of digital revolution of Sivaji-starrer Karnan, yet another cult classic and mythological flick, Thiruvilayadal, which featured the thespian, has been digitalised, restored and released recently.

    In this 1965 film, Sivaji Ganesan played Lord Shiva in such a convincing manner that people would visualise Lord Shiva to resemble him.

    Directed by A.P. Nagarajan, the movie is based on Thiruvilayadal Puranam, a Saivite devotional epic. Each story teaches you something for life.

    Savithri, Muthuraman, Nagesh, Manorama and K.B. Sundarambal, among others, formed the major cast. Who can forget the lengthy conversation poor poet Dharumi, played by Nagesh, has about his inadequacies to Lord Shiva who is in disguise in front of him? The songs by K.V. Mahadevan were runaway hits.

    “I have digitalised my father’s movie Thiruvilayadal in India and abroad (Germany and England). All the flaws in the 47-year-old negative have been meticulously removed, resulting in an enhanced version in picture and sound.

    Hundreds of computer technicians worked day and night for the last four months to bring the movie to its original glory. The film has been released throughout Tamil Nadu.

    Thunderous applause for the songs, dialogues and humour stand testimony to its grand success,” reveals Mr Paramasivan, son of the late filmmaker.


    http://www.deccanchronicle.com/chann...film-goers-761
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  4. #933
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    NOV - more shockers for you - the other day I watched Rajapart Rangadurai and must say, I would be able to watch that again soon rather than Gnana Oli

  5. #934
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,495
    Post Thanks / Like
    Not shocked. Rajapart Rangadurai is another fav of mine.... In fact I like a lot of soft movies of that era like Graha Pravesam, Bharatha Vilas, Moondru Deivangal, etc....
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  6. #935
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் , மிகச்சிறந்த மலையாள குணச்சித்திர நடிகருமான திலகன் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  7. #936
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    the noted veteran malayalam character actor Thilagan has carved a niche for himself in Mollywood and remained an ardent fan and admirer of our beloved NT throughout his life. May his soul rest in peace. we join with u Mr.Joe

  8. #937
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV View Post
    Not shocked. Rajapart Rangadurai is another fav of mine.... In fact I like a lot of soft movies of that era like Graha Pravesam, Bharatha Vilas, Moondru Deivangal, etc....
    somehow i like the gnana oli kind of sentiments and emotions rather than the more tragic filled rajapart rangadurai kind of sentiments and emotions........... may be to do with the father/grandfather love & friend love in gnana oli is more sweet compared with a more realistic sibling love (combined with letting down of elder brother)
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  9. #938
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வியட்நாம் வீடு - 1970 பகுதி- 1
    எனது சிறு வயது முழுக்க நெய்வேலியில் கழிந்தது எனது எஸ்.எஸ்.எல்.சி வரை. இரு வேறு பட்ட நம்பிக்கைகளில் உழன்று வந்தேன். ஒரு புறம் பெரியாரின் ஈர்ப்பு. மறுபுறம் மார்க்சிடம். வீட்டில் பூணல் போட மறுத்து விட்டேன்.( எனது அம்மா ,அப்பா இருவருமே சற்று முற்போக்கு) எனது பேச்சுக்கள் வன்னியர் பேச்சு வழக்கு போலவே இருக்கும்.(கல்யாணமான புதிதில் என் மனைவி ஆச்சர்ய பட்டு கேட்ட கேள்வி- நீங்க பேசறது பிராமண பாஷையாகவே இல்லையே?)கடவுளிடம் முரண் படாமலும்,நம்பிக்கை கொள்ளாமலும்(Agnostic ) உள்ளவன். அதனால் எனக்கு என் உறவினர்களால் ப்ராமின்களை பற்றியும்,நண்பர்கள்,சூழ்நிலை,தேர்ந்த படிக்கும் வழக்கம்,கொள்கைகளின் பால் மற்றையோரையும் நன்கு அறிந்ததால் , இரு துருவங்களையும் நன்கு அறிந்தவன். அப்போது இரண்டே இரண்டு வேறு பட்ட கருத்துக்கள்தான் உலவி வந்தன. பிராமணர்கள் வேற்று கிரக வாசிகள் போலவும்,எல்லோரையும் அடிமை கொண்டு,பிரித்தாண்டு, சூழ்ச்சியிலேயே வாழும் கொடியவர் என்ற திராவிட ஹிட்லர் டைப் பிரச்சாரங்கள் ஒரு புறம். நம்பளாவெல்லாம் மூளையுள்ளவா. என்ன இருந்தாலும் ஒஸ்திதான் என்ற அசட்டு நம்பிக்கை மறுபுறம். பிராமணர்கள் கொஞ்சம் மிகையான தோரணை, நம்பிக்கைகள், அகந்தை, கொண்டு மற்றோருடன் இருந்து தனித்து தெரிந்த காலம். சில வீட்டில் பெரியோர்களை பார்க்கும் போது நிஜமாகவே வேற்று கிரக வாசிகள் போலவே நடந்து கொள்வார்கள்.நடை,உடை,பாவனை, தோரணை எல்லாவற்றிலும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் நிலவரம் சராசரிக்கும் கீழேதான் இருக்கும். அறிவில்,படிப்பில், சமூக அந்தஸ்தில்,பணத்தில்.
    அப்போது, சில கதைகளில் பிராமணர்களை அறிய வாய்ப்பிருந்தது (அதிக பட்ச எழுத்தாளர்கள்) ஆனால் படங்களில் அந்த சமூகம் பிரதிபலிக்க பட்ட விதம் காமெடிக்காக மட்டுமே. அதுவும் வஞ்ச மனம் கொண்ட காமெடியன் ஆக. எனக்கு சிரிப்பாக வரும். சராசரியான தமிழர்களை (வீட்டில் தமிழ் தவிர எதுவும் பேச மாட்டார்கள். மாறாக சில திராவிட தமிழ் ரத்தங்கள் வீட்டில் தெலுங்க,கன்னட பேச்சுக்களை ரசிக்கலாம்) இந்த மாதிரி ஒதுக்க என்ன காரணம் என்று யோசித்தால் மூளை வரளும்.
    இந்த சூழ்நிலையில் எழுபதில் வந்த படம் வியட்நாம் வீடு. இந்த படத்தை ஒரு நல்ல நடு முயற்சி என்று சொல்லலாம். Melodrama வில் இருந்து விலகாமல் , ஒரு ரியலிச படத்திற்கான அம்சங்களை கொண்டிருந்த படம். சமகால பிரச்சினைகளை பேசியது புதிய மீடியத்தில், சமூகத்தில் அந்நிய படுத்த பட்ட, மிகையான நம்பிக்கை,அகந்தை,கவுரவ மனப்பான்மை கொண்ட ஒரு சமூகத்தை மைய படுத்தி அவர்களின் சராசரி பிரச்சினைகளை பேசியது.(அதுவரை பிரச்சினைகள் என்றால் பீம்சிங் பட பிரச்சினைகளையே பார்த்து அலுத்த நெஞ்சங்களுக்கு ஆறுதலாக) ஓய்வு பெறவிருக்கும் ஒரு மேல் மத்யதர பிரைவேட் கம்பெனி ஊழியனை பேசியது.(கவர்மென்ட் ஊழியர் என்றால் வேலை பார்க்கும் போது வறுமையிலும்,retire ஆனதும் செழிப்பாகவும் இருப்பார்.பிரைவேட் என்றால் தலை கீழ் ) அவனின் சராசரி உடல் பிரச்சனையை பேசியது. சிறிது moral value வில் பிறழும் அவன் மகனை பற்றி பேசியது.பிறந்த குலத்தில் உள்ள அறிவு செருக்கை இழந்த படிக்காத அவன் மகன் பிரச்சினை பேசியது. பருவ வயதின் பால் பட்டு வழுவ இருந்த மகளை பேசியது. நன்கு சம்பாதித்தும் சேமிக்க தெரியா உயர் சம்பள காரர்களின் வயதான வாழ்க்கையை பேசியது. அவர்களின் positional importance வீட்டிலும்,வெளியிலும்,அலுவலகத்திலும் வதை படும் கொடுமை பேசியது. பிராமணர்களும் நம்மிடையே உள்ள ரத்தமும் ,சதையும் கொண்ட ,பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் சராசரி மனிதர்களே என்று பேசியது. அந்த மனிதனின் மிகையான நம்பிக்கைகளும்,செருக்கும் சோதனைக்குள்ளான மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis சமாசாரங்களை ,அறிவு-ஜீவி மேர்பூச்சற்ற நேர்மையான,வெளிப்படையான,பாவனைகள் களைந்த நல்ல முன் முயற்சிதான் வியட்நாம் வீடு.
    (தொடரும்)

  10. #939
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Jordan
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    கலைச்சூரியனின் ஜூன் கதிர்கள்

    குலமகள் ராதை

    [7.6.1963 - 7.6.2012] : 50வது துவக்க தினம் : பொன்விழா ஆண்டின் தொடக்கம்

    பொக்கிஷப் புதையல்

    காவிய விளம்பரம் : சுதேசமித்ரன் : 19.10.1960



    'விரைவில் வருகிறது' விளம்பரம் : தமிழ் சினிமா : 15.4.1961



    'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.6.1963


    பக்தியுடன்,
    பம்மலார்.

    A Good Shivaji Ganesan movie with lovely songs and charming devika.

  11. #940
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நமது தமிழ் சினிமா உலகத்தை சேர்ந்தவர்கள் கூட இப்படி சொல்லலாமா, சொன்னால் நமக்கு அதனால் ஏதேனும் லாபம் உண்டா? அல்லது வேறு சிலரின் வெறுப்பை சம்பாதிக்க நேருமோ என்றெல்லாம் யோசிப்பார்கள். அப்படியே சொன்னாலும் அதை balance பண்ணுவதற்காக வேறு சில விஷயங்களையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் மலையாள திரைப்பட உலகை சேர்ந்த இருவர் பல நேரங்களிலும் தாங்கள் ஒரு நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதை பெருமையாக சொல்லுவார்கள். ஒருவர் சில வருடங்களுக்கு முன் மறைந்துப் போன வீ.எம்.சீ. ஹனீபா என்ற கொச்சின் ஹனீபா. இரண்டாமவர் நேற்று காலமான திலகன் அவர்கள்.

    திலகன் அவர்கள் சினிமாவில் வெகு தாமதமாகவே நுழைந்தார். நாடகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு கேரளத்தின் மூளை முடுக்கிலெல்லாம் நாடகம் நடத்திய அவர் அந்த காலக் கட்டங்களில் கேரளத்தில் வெளியாகும் நடிகர் திலகத்தின் படங்களை விரட்டி விரட்டி பார்ப்பாராம். ஒரு முறை இரு முறை அல்ல, பல முறை.

    நடிகர் திலகத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதை தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்த திலகனுக்கு அந்த வாய்ப்பு கை நழுவி போய்க் கொண்டிருந்தது. மேலும் நடிகர் திலகம் தன் உடல் நிலை காரணமாக் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்து விட்ட நேரம். அந்த நேரத்தில்தான் நடிகர் திலகம் ஒரு யாத்ரா மொழி படத்தில் நடிக்கிறார். அதை கேள்விப்பட்ட திலகன் தயாரிப்பாளர் வி.பி.கே. மேனன் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன் ஆகியோரிடம் சென்று தன் ஆசையை சொல்கிறார். இறுதி வரை பட வாய்ப்பிற்காக யார் முன்னாலும் தலை குனியாத தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காத திலகன் எனக்கொரு வேடம் இந்தப் படத்தில் வேண்டும் என்று கேட்டார் என்றால் அவர் நடிகர் திலகத்தின் மீது எத்துனை மதிப்பு மரியாதை மற்றும் அன்பு வைத்திருந்தார் என்பது புரியும்.

    அனைத்து வேடங்களுக்கு நடிகர்கள் முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கிவிட்ட நிலையில் திலகன் அவர்களுக்கு ஏற்ற ரோல் படத்தில் இல்லை என பிரதாப் சொல்ல, எனக்கு கௌரவ தோற்றம் என்றாலும் போதும் என்று சொல்ல உடனே தயாரிப்பாளரும், இயக்குனரும் மோகன்லாலும் கலந்து பேசி நடிகர் திலகத்தை மிரட்டுவது போல் வந்து அவர் முன்னாளில் செய்த உதவியை நினைவு கூர்ந்து அவரிடமே சரணடையும் அந்த பாத்திரத்தை உருவாக்கினார்கள். படத்தில் அந்த ஒரே ஒரு காட்சியில் மட்டுமே திலகன் வருவார். நடிகர் திலகத்துடன் நான் combination ஷாட்-ல் நடித்தேன் என்பதை என் வாழ்நாள் பெருமையாக சொல்லுவேன் என்று சொன்னவர் திலகன்,

    மிகப் பெரிய நடிகர். மிக மிக இயல்பான நடிகர். அவரின் அந்த voice modulation, dilaogue delivery எல்லாம் பிரமாதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மகா கலைஞனை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு நமது அழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •