Results 1 to 4 of 4

Thread: BHARATHI RAJA'S "Therkathi Ponnu"

Threaded View

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    BHARATHI RAJA'S "Therkathi Ponnu"

    கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் நெடுந்தொடர் ``தெக்கித்திப் பொண்ணு''. இயக்குனர் பாரதிராஜாவின் எண்ணம், எழுத்து, இயக்கத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

    முதல் முறையாக ஒரு நெடுந்தொடரை இயக்க களம் இறங்குகிறார் பாரதிராஜா.

    நெப்போலியன் கதாநாயகனாகவும் ரஞ்சிதா கதாநாயகியாகவும் நடிக்க வாகை சந்திரசேகர், சொர்ணமால்யா, `கனாக்காணும் காலங்கள்' புகழ் கே.எஸ்.முருகன், `பருத்திவீரன்' செவ்வாழை ராசா மற்றும் புதுமுகங்களாக மதுரை மண்ணின் மைந்தர்களான சங்கரபாண்டியன், ரோஸ்முகிலன், ஸ்டாலின், வைசாலி, செண்பகம், சிவாஜி, வெள்ளைப்பாண்டி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கின்றனர்.

    "மூணு கிராமத்தைச் சேர்ந்த மூணு குடும்பங்கள்ல நடக்கிற கதை. தலைமுறை தலைமுறையா அந்த குடும்பத்திற்குள் நடக்கும் பாசப்பிணைப்புகள், காதல் போராட்டங்கள், பங்காளி உறவுகள் என்று பகையும் நேசமும் நெகிழ்ச்சியும் கொண்டதுதான் இந்த கதையின் ஆணிவேர்.

    நகரத்துல இருக்குற சில பொண்ணுங்கள்லாம் சம உரிமை வேணும்னு கேக்குறாங்க. அதுக்கு பல திட்டங்கள்லாம் போடுறாங்க. ஆனா எந்த சட்ட திட்டமும் இல்லாம ஆணும் பெண்ணும் சமம்ங்கிறத இயல்பா பாவிக்கிறவங்க கிராமத்துப் பொண்ணுங்க. பாசத்துலயும் சரி கோவத்துலயும் சரி, இந்த பொண்ணுங்கள மிஞ்சினவங்க யாரும் கிடையாது. அவங்களை யாராலயும் எதுனாலயும் கட்டுப்படுத்த முடியாது. அப்படி ஒரு பாசமும் நேசமுமான பொண்ணப் பத்தின கதைதான் இந்த `தெக்கித்திப்பொண்ணு'' என்கிறார், தொடரை இயக்கும் பாரதிராஜா.

    ரத்னகுமார் கதைக்கு, கவிஞர் தேன்மொழி, சிவாஜி, ரோஸ்முகிலன் ஆகியோர் வசனம் எழுத பாரதிராஜா திரைக்கதை அமைத்து இயக்குகிறார். தலைப்பு பாடலுக்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. பாடல்கள்: சினேகன், தேன்மொழி, ஒளிப்பதிவு: தனபால், படத்தொகுப்பு: அசோக், பின்னணி இசை: நூர், கலை இயக்குனர்: ராஜா, நடனம்: கூல் ஜெயந்த். சண்டைப் பயிற்சி: ராஜசேகர்.



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. "Padmashri" "Isaimani" Dr. Sirkali Govin
    By pulavar in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 5th February 2010, 03:19 PM
  2. "Nayakan" among "Time" mag's 100 best
    By arun in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 264
    Last Post: 20th June 2008, 09:36 PM
  3. Yuvan Shankar Raja's new film - "Billa" with Ajit
    By itsmuls in forum Current Topics
    Replies: 40
    Last Post: 1st January 2007, 10:42 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •