Results 1 to 10 of 29

Thread: Dindukkal Saarathy

Threaded View

  1. #1
    Senior Member Diamond Hubber directhit's Avatar
    Join Date
    Feb 2008
    Posts
    5,848
    Post Thanks / Like

    Dindukkal Saarathy

    நடிப்பு: கருணாஸ், கார்த்திகா, நாசர்
    இசை: தினா
    இயக்கம்: சிவசண்முகன்
    நிர்வாகத் தயாரிப்பு: ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா
    தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் & ட்ரீம் டவர்ஸ்

    நல்ல கதையிருந்தால் போதும். யாரும் நாயகனாக நடிக்கலாம்.... எப்படிப்பட்ட மந்தமான சூழலிலும் வெற்றிக் கொடி கட்டலாம் என்பதற்கு உதாரணமாக வந்துள்ளது திண்டுக்கல் சாரதி திரைப்படம்.

    கதாநாயகனாக கருணாஸ் நடித்துள்ள முதல் படம். ஒரு அர்த்தமுள்ள கதையின் நாயகனாக கருணாஸ் தனது புதிய கேரியரை துவங்கியிருக்கிறார்.

    அச்சகம் நடத்தும் சாரதி நிறத்தில் கருப்பு. அந்தக் கறுப்பு மனதிலும் தங்கிவிடுகிறது, தாழ்வு மனப்பான்மை உருவில்.

    மகா கறுப்பியாக உள்ள பெண்கள் கூட கட்டிக்கொள்ளத் தயங்கும் சாரதியை அழகான ஒரு சிவப்புப் பெண் மணக்க இசைகிறார்.

    தான் கருப்பாக, சுமாராக இருப்பதால் வந்த தாழ்வு மனப்பான்மை, மனைவி மீதான அனாவசிய சந்தேகமாக மாறுகிறது.

    இந்த சந்தேக புத்தியால் அவதிப்படும் சாரதி தனது உள்ளப் பிரச்சினைகளிலிருந்து எப்படி நல்ல இல்லத்தரசனாக மாறுகிறார் என்பது க்ளைமாக்ஸ்.

    கருணாஸுக்காகவே பார்த்துப் பார்த்து தைத்த சட்டை மாதிரி கச்சிதமாகப் பொருந்துகிற ரோல் இது. அருமையாகச் செய்திருக்கிறார். யாருமே நல்ல வாய்ப்பு வரும்போதுதான் பிரமாதமாக ஜொலிக்க முடியும் என்பதற்கு கருணாஸ் ஒரு எடுத்துக்காட்டு.

    கார்த்திகா இயல்பாக நடித்திருக்கிறார். நடிக்க நிறைய வாய்ப்பு... அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    நாசர், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட, மற்ற நடிகர்கள் எல்லாருமே அருமையாகச் செய்திருக்கிறார்கள்.

    ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனரின் அபார நம்பிக்கை தெரிகிறது. ஒரிஜினல் மலையாளக் கதையான 'வடக்கி நோக்கி யந்திரம்' தந்த தெம்பு அது.

    தினாவின் பாடல்கள் சுமார்தான்... ஆனாலும், சன் டிவி விளம்பரங்கள் செய்த மாயாஜாலம் அவற்றையும் ஹிட்டாக்கியிருக்கின்றன.

    புதிய இயக்குநர் சிவசண்முகனுக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது.

    வரவேற்க வேண்டிய படம்
    . சன் பிக்சர்ஸுக்கு இன்னொரு வெற்றிப் படம்!!

    That's tamil
    Till the full stop doesn't come, the sentence is not complete - MSD

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •