Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    உயர்ந்த மனிதன் படத்தைப் பற்றிய ஆய்வு தொடர் மூலம் திரியில் ஒரு சுறுசுறுப்பை உருவாக்கியிருக்கிறீர்கள். எளிதில் எதையும் பாராட்டி விடாத Plum கூட பாராட்டி விட்டார் என்றால் உங்கள் எழுத்து நடை நிச்சயமாக அனைவரையும் கவர்ந்திருக்கிறது. நீங்கள் இதற்கு முன்பும் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய உங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறீர்கள். ஆனால் அப்போதெல்லாம் 40 வரிகளுக்கு மிகாமல் கட்டுரை வரைக என்று யாரோ உங்களுக்கு கட்டளை இட்டது போல் பதிந்திருப்பீர்கள். இந்த் முறைதான் அந்த சட்டகத்திலிருந்து வெளியே வந்து கொஞ்சம் பெரிதான ஆய்வை செய்திருக்கிறீர்கள். தொடரட்டும் இந்த பாணி.

    படத்தின் சிறப்புகளைப் பற்றி குறிப்பாக பாத்திர அமைப்பின் சிறப்புகளைப் பற்றி நீங்கள், பிரபு மற்றும் சாரதி மூவரும் சுட்டிக் காட்டி விட்டீர்கள். அதிலும் nuances ஆக அமைந்திருக்கும் சில விஷயங்கள் அழகாய் சொல்லப்பட்டது. எனக்கு பிடித்த மற்றொரு விஷயம் என்னவென்றால் இது நடிகர் திலகத்தின் 125 -வது படம், 125 பட விழாதான் அண்ணா கடையாக கலந்து கொண்ட விழா போன்ற அனைவருக்கும் தெரிந்த விஷயங்களையெல்லாம் தொடாமல் படத்தின் சிறப்புகளை பற்றி மட்டுமே பேசியதுதான்.

    ஒரு படம் அல்லது அந்த படத்தின் திரைக்கதை சொல்லவரும் பாத்திரத்தன்மை அதாவது வசனங்கள் அல்லது காட்சி அமைப்புகள் மூலமாக அல்லாது பார்வையாளன் தன் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்ள வேண்டியபடி அமைந்திருக்கும் சில நுணுக்கங்களை நீங்கள் அழகாய் observe செய்திருக்கிறீர்கள். அதில் ராஜலிங்கம் - சத்யா உறவும் ஒன்று. தமிழ் சினிமா பார்ஃமுலாபடி இல்லாமல் முதலாளி -தொழிலாளி உறவே ராஜலிங்கம் கண்ணோட்டத்தில் முன் நிற்கும். அசோகன் சிபாரிசுபடி வேலைக்கு சென்று சேரும் இடத்தில் ராஜலிங்கத்தைப் பார்த்தவுடன் ஒரு கிராமீய வெகுளிதனத்துடன் சத்யா சென்று அவரிடம் பேச, உனக்கு முன்னாடியே தெரியுமா என்று அசோகன் கேட்க ஒரு சின்ன தலையாட்டலில் அதற்கு பதில் சொல்லிவிட்டு boxing போடுவது போல் கையை வைத்துக் கொண்டு நல்லா fight பண்றாண்டா என்று casual -ஆக நடிகர் திலகம் சொல்லும் அந்த ஷாட் இருக்கிறதே, ரொம்ப அழகாய் பண்ணியிருப்பார்.

    ஆனால் அதே நேரத்தில் அந்த சத்யா பாத்திரம் முதலாளி தொழிலாளி என்ற உறவையும் மீறி தன் தந்தை என்று தெரியாமலே ராஜலிங்கத்திடம் ஒரு வித attachment ஏற்படுத்திக் கொள்வதையும் நாம் காணலாம். முதலாளியும் அம்மாவும் குழந்தை இல்லாததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். முதலாளி பாவம் என்று சத்யா நாகையாவிடம் சொல்லும் காட்சி அதற்கு உதாரணம்.

    அது போல முன்னாளில் பார்வதி நெய்து கொடுத்த ஸ்வெட்டரை பீரோவில் மறைத்து வைத்திருக்கும் ராஜலிங்கம் அதை சலவைக்கு போடுவதற்காக எடுக்கும் சத்யா, அந்த நேரம் அங்கே வரும் ராஜு அதைப் பார்த்துவிட்டு உடனே அதை பிடுங்கி வைத்துக் கொண்டு அந்த ஸ்வெட்டரை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு தடவி கொடுக்கும் ராஜுவை வியப்போடு பார்க்கும் சத்யா, அந்த காட்சியில்தான் நடிகர் திலகம் என்ன ஜால விதை காட்டியிருப்பார்? மறைத்து வைத்த்ருந்த ஸ்வெட்டரை இவன் வெளியே எடுத்து விட்டானே என்ற கோபம், ஸ்வெட்டரை அணைத்து கொண்டு மறைந்து போன மனைவியுடன் வாழ்ந்த அந்த நினைவுகளை அசை போடும் சந்தோஷம், நிகழ்கால மனைவி சட்டென்று வந்து விட பீரோவில் ஸ்வெட்டரை மறைத்துவிட்டு உள்ளுக்குள் உருவாகும் பதைபதைப்பை மறைத்தபடி சமாளிக்கும் கவனம் இப்படி நிமிஷ நேரத்தில் நூறு பாவம் காட்ட நமக்கு ஒரு சிவாஜி கணேசன்தானே இருந்தார்.

    வாசு அவர்கள் குறிப்பிட்டிருந்த பார்ட்டி காட்சியிலும் நீங்கள் சொன்ன மாதிரி ராஜு சத்யாவை ஒரு தொழிலாளி ஸ்தானத்தில் வைத்துதான் பார்ப்பார். அசோகன் ஒரு ரகசியத்தை சொல்லப் போவதாக கூறும்போதுதான் சத்யாவாகிய சிவகுமார் அறைக்குள் நுழைவார். ரகசியத்தின் வெளிப்பாடே நேரில் வந்ததை கண்டதும் டாக்டர் கோபால் சத்யாவை இருக்க சொல்ல, அதன் சூழ்சுமம் புரியாமல் ஒரு வேலைக்காரனுக்கு முன்னாள் இவன் இப்படி நடந்துக் கொள்கிறானே என்ற கோபத்தில் சத்யா நீ போ என்று சொல்லும் ராஜு, சத்யா நீ போகாதே என்று அலறும் கோபால், கோபால் யூ பூஃல் என்று நண்பனை கடிந்துக் கொண்டுவிட்டு சத்யா நீ போ என்று சொல்லும் ராஜு, இந்தக் காட்சியைப் பார்க்கும் போது ஒரு நடிகன் தன் பாத்திரத்தின் தன்மையை சரியாக பிரதிப்பலிப்பது என்பதை ஒரு பாடமாகவே நடத்தியிருப்பார்.

    அந்த சத்யா வீட்டு டிபன் காரியர்-ல் வரும் சாப்பாட்டை நாக்கில் நீர் சொட்ட சொட்ட கண்ணில் நீர் வழிய வழிய துண்டால் அதை துடைத்தபடி இப்படி வாய்க்கு ருசியாக சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு என பேசிக் கொண்டே சாப்பிடும் அந்த காட்சி கவிதை மட்டுமல்ல பின்னாளில் ஒரு 17 வருடங்கள் கழித்து பத்திரிக்கைகளும் குறிப்பாக இளைய தலைமுறையினரும் ஆஹா ஓஹோ என்று பாராட்டிய மீன் சாப்பிடும் காட்சிக்கு இது precursor என்று சொல்ல வேண்டும்.

    தன் மேல் அளவு கடந்த அன்பு என்பதையும் தாண்டி ஒரு வித ஆதிக்கம் செலுத்தும் மனைவியிடம் ராஜு விட்டுக் கொடுத்து போவதை பல முறை பார்க்கலாம். சற்று உடம்பு சரியில்லை என்று சொன்னவுடன் உடனே டாக்டரை வரவழைத்து இவருக்கு உடனே injection போடுங்கள் என்று கட்டளையிடும் மனைவியிடம் விமலா எனக்கு ஒண்ணுமில்லே என தவிர்க்கப் பார்த்து injection syringe எடுக்கும் நண்பனிடம் டேய் பாவி என்னடா செய்யறே என்று கையாலாகாத கோவத்தை வெளிப்படுத்தும் அந்த பாங்கு, இதை எதுவுமே சட்டை செய்யாமல் டாக்டர் எல்லோருக்கும் போடுற syringe -ஐ இவருக்கு use பண்ணாதீங்க என்று சொல்லும் மனைவியைப் பார்த்து a needle for the rich and a needle for the poor என்று அந்த பணக்கார திமிரை ஒடுக்க முடியாத நிலையை ஒரு வித இயலாமையோடு வெளிப்படுத்துவாரே, what a class act!

    ஆனால் உங்களோடு ஒரு இடத்தில் நான் வேறுபடுகிறேன். 50,000 acres of fertile land காட்சி படத்தின் highlight -களில் ஒன்று. சின்ன வயது முதலே submissive -என்ற நிலையிலே வாழ்க்கை அமையப் பெற்ற ஒரு மனிதன், முதலில் தந்தை பின் மனைவி என்று அவர்கள் சொல்படி கேட்டு நடக்கும் ஒரு மனிதன், கட்டிய மனைவியை காப்பாற்ற முடியாத சோகத்தை வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளே புதைத்து வைத்துக் கொண்டு வாழ்பவன், கோழை என்று உயிர் நண்பனாலேயே பரிகசிக்கப்படுபவன், அதனனல் வரும் கோவத்தை கூட வெளிபடுத்த இயலாதவன் இப்படி பல உணர்வுகளை அடக்கி வாழும் ஒரு மனிதனை ஒரு பொய் சொல்லி விட்டான் (இரண்டு பொய்?) என்று பெரிதாக எதையோ கண்டு பிடித்தாற் போன்று குறுக்கு விசாரணை செய்ய முற்படும் மனைவியை பார்த்து அது நாள் வரை அடங்கி கிடந்த கோபம், வருத்தம், இயலாமை, ஆற்றாமை ஆகிய அனைத்தும் ஒரு சேர வெடித்து புறப்படும் ஒரு மனிதனை கண் முன் கொண்டு நிறுத்தும் அந்த காட்சி வெகு நிச்சயமாக படத்தின் highlight -களில் ஒன்று.

    இந்தப் படத்தில் சிரித்து நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கும் மற்றொரு நபர் ஜி.சகுந்தலா. தன்னை கணவன் அடித்து விட்டான் என கோவத்தில் குற்றம் சொல்லும் சௌகாரிடம் அவர் தன் வீட்டில் நடந்த அந்த ஊடலுக்கு பின் கூடல் என்ற romantic incident -ஐ விவரிக்கும் அழகே அழகு! நடந்தவற்றை விலாவாரியாக சொல்லி கொண்டே வந்து முக்கியமான கட்டத்தில் நிறுத்தி விட்டு இதுக்கு மேலே சொன்னால் நான் அசடு! இதுக்கு மேலே கேட்டால் நீ பைத்தியம் என்று முத்தாய்ப்பாக சொல்லிவிட்டு போகும் அந்த காட்சியை மறக்க முடியாது.

    நான் எதிர்பார்த்த ஒன்றை எழுதியிருந்தீர்கள். நான் எதிர்பார்த்திருந்த மற்றொன்றை எழுதாமல் விட்டு விட்டீர்கள். வாணிஸ்ரீ புகழ் பாடும் படலம் நான் எதிர்பார்த்தது. அதே நேரத்தில் உங்களின் இன்னொரு favourite பற்றி அதாவது பாரதி காவியம் பாடாதது ஆச்சரியமே.

    மெல்லிசை மன்னர் பற்றிய கருத்திலும் எனக்கு மாறுபாடு உண்டு. ஆனால் அதை என்னை விட விஷயம் தெரிந்த கார்த்திக் மற்றும் வாசு ஆகியோர் சொல்லி விட்டனர். நான் வியந்து ரசிக்கும் ஒரு இசை சம்மந்தப்பட்ட விஷயம் இந்தப் படத்தில் என்னவென்றால் இசை அரசி மூன்று நாயகியர்களுக்கு குரல் கொடுத்திருப்பார். இதை அவர் கந்தன் கருணையிலே செய்திருப்பார் (நடிகையர் திலகம், புன்னகை அரசி மற்றும் ஜெஜெ) என்ற போதிலும் அவர்கள் சில பல வருடங்களாக நடித்துக் கொண்டிருந்தவர்கள். ஆனால் இந்தப் படத்திலோ வாணிஸ்ரீயும் சரி பாரதியும் சரி படவுலகத்தில் நுழைந்த புதிது. இருப்பினும் அவர்கள் குரலுகேற்ப தன்னை மாற்றிக் கொண்டு அனாயசமாக பாடியிருப்பார்.

    இந்தப் படத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். முதலில் சொன்னது போல் தொடரட்டும் இது போல உங்கள் பணி/பாணி.

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •