Results 1 to 10 of 122

Thread: Why I Consider IR Unparalleled

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெங்கிராம் ,

    ராசைய்யா பற்றி எனக்கு மாற்று கருத்து இல்லை.ஆனால் அவர் அணுக படும் விதம் எனக்கு உவப்பாக இல்லை.முன் பின் தொடர்ச்சியை தூக்கி எறிந்து ,உன்னதங்களை புறக்கணித்து,லாவணி பாட எனக்கு விருப்பமில்லை.உண்மைகள் கசக்கும்.

    நான் 17 வயதாக இருக்கும் போது வந்தவர் ராசைய்யா.எனக்கு அவர் மேல் மதிப்பில்லாமல் இருக்குமா?ஆராயாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசும் குணம் எனக்கில்லை.ஒவ்வொரு நுணுக்கமாக ஆராய்ந்து நிறுவ தயாராகவே உள்ளேன்.உணர்ச்சி வச படாமல்.

    எப்படி உங்களுக்கு விற்பன்னர்கள் கருத்துக்கள் உள்ளதோ,அதே போல விஸ்வேஸ்வரன் முதல் பல இசை மேதைகள் ,விஸ்வநாதன்-ராமமூர்த்தி பற்றியும் பேசியுள்ளனர். என்ன ஒன்று,இளையராஜா தலைமுறையிடம்,இன்டர்நெட் வசதியாக மாட்டியுள்ளதால் ,சௌகரியம்.அது எப்படி உங்களுக்கு வசதி என்றால் சுகா போன்றோர் விற்பன்னர்களாகவும் ,தேர்ந்த இசை ஆய்வாளர்களாகவும் ஆகி விடுவார்களா?

    ரகுமான் ஆஸ்கார்,கிராம்மி கமிட்டி ஆராய்ந்ததால்,இசை பல்கலை கழகம் டாக்டர் வழங்குவதாலோ ஆராய பட்டால் ,அவர்தான் இந்தியாவின் இணையற்ற இசை மேதை என்று முடிவு கட்ட முடியுமா?

    ஒவ்வொன்றிலும் உள்வட்டம் என்று உள்ளது. இது நீங்கள் சொல்லும் மன பயிற்சி,மரபு தொடர்ச்சி,அனைத்திலும் சம பரிச்சயம்,திறந்த மனப் பாங்கு, விருப்பங்களை மட்டும் நிறுவ விரும்பா சமத்தன்மை இவையெல்லாம் அவசியம்.நான் இதை முக்கால் வாசி பேர்களிடம் பார்க்கவில்லை.

    நீங்கள் இதே கருத்தை நிறுவினாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.ஆனால் வழிமுறைகள்,நெறிமுறைகள்,(தவறான ஆட்டம்,உணர்ச்சி வச படுதல் தவிர்த்த) உள்வட்டம் அமையுமானால் ,நான் சொன்னவற்றை நிறுவ தயாராகவே உள்ளேன்.

    உங்களுக்கு திறக்க பட்ட மன கதவுகள் எங்களுக்கு பல இசை மேதைகளால் பல முறை திறக்க பட்ட ஒன்று.

    எனக்கும் அவர் பின்னணி இசையின் நுணுக்கங்களில் மதிப்புண்டு.ஒரு முறை நான் சினிமா எடுத்தால் இளைய ராஜாவை தவிர யாரையும் ஆர்.ஆர் போட விடமாட்டேன் என்று சொன்னவன் நான்.
    Last edited by Gopal.s; 18th July 2014 at 11:07 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •