இளையராஜா- King of Heavenly Hummings"




சினிமாவில் ஹம்மிங் பற்றி இந்தப் பதிவில் சினிமா ஹம்மிங தேவதைகள் பார்த்தோம்.அதில் இளையாராஜாவுக்கு முன்/பின்/சமகாலத்திய இசை ஜாம்பவான்களின் பாடலில் ஹம்மிங் பயன்படுத்தலைப் பற்றி பார்த்தோம்.

இளையராஜா புதுமை ஸ்பெஷலிஸ்ட் என்பதால் ஸ்பெஷலாக அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு.மேஸ்ட்ரோ எதையுமே வித்தியாசமாகக் கொடுப்பவர்.ஹம்மிங்கை விட்டுவைப்பாரா?

இது தேவதைகளின் மொழி.பாடலை உணர்ச்சிகளால் ஒப்பனைச் செய்பவை.அதிலும் புதுமை புகுத்தி இருக்கிறார்.ஹம்மிங்கை ஒரு இசைக்கருவியாக உபயோகிக்கி்றார்.

உணர்ச்சிகள் கலையாமல். எந்த வித gimmicks இல்லாமல் அழகாக ஹம்மிங்கை spray paint செய்திருப்பார்.


ஜென்சி ஹம்மிங்கில் முன்னணி. பின்னுகிறார்.பிறகு ஜானகி/வாணி/சசிரேகா/ஷைலஜா/உமா/சித்ரா/சுஜாதா/ராதிகா/பூரணி/சுசிலா.

HUmm_AnnaiUnnaThed.mp3


”அன்னக்கிளி உன்னத்தேடுதே”-1976-அன்னக்கிளி
முதல் படம்.முன் இருந்த ஜாம்பவான்களின் சாயல் இல்லாதலட்சணமான ஹம்மிங்.இவர் யார் என்று தெரியாமலேயே மனதில் படிந்தது.

HUmm_RasaveUnnaNambi.mp3

”ராசாவே உன்னை”-1985-முதல் மரியாதை
ஜானகியின்ஆரம்ப கிராமத்து வெகுளி ஹம்மிங்.மனதில் “பச்சக்” என்று ஒட்டிக்கொள்ளும். வித்தியாசம் அன்ட் அட்டகாசம்.

”மஞ்சள் நிலாவுக்கு”-1979 -முதல் இரவு
Humm_manjalnilavukku.mp3

“ஊஊ......................” என்று ரயிலை கட்டி இழுத்துச்செல்வது மாதிரி ஹார்ன் பெண் ஹம்மிங் சூப்பர்.

”என் இனிய பொன்”-1980-"மூடுபனி”
Humm-EnIniya Pon.mp3

கிடாரைத் தொடர்ந்து தேவதைகள் அடுத்து புல்லாங்குழலைத் தொடர்ந்து தேவதைகள் வேறுவிதமாக. சூப்பர்.ஸ்டைல் ஹம்மிங்.

”ராத்திரியில் பூத்திருக்கும்"”--1983-தங்கமகன்
Humm-Rathiriyil Poo.mp3

இந்த ஹம்மிங் வருவதற்கு முன்/பின்/சேர்ந்து இசையை வாரி இறைக்கிறார்.stunning! அடுத்ததும் அசத்தல்.

"பூவில் வந்து”-1982-காதல் ஓவியம்
Humm_Poovilvandu.mp3

பாலுவின் ஆரம்ப மோகனராக ஹம்மிங் அருமை.ஹம்மிங் முடிந்தவுடன் வரும் இசையில் நம்மை வேறு உலகத்தில் மிதக்க விடுகிறார்.சின்னசாமி என்றால் ராசய்யா ஸ்பெஷல் உழைப்பு?











கிழ் வரும் ஹேம் ராம் பாட்டின் ஹம்மிங்கை கேட்காமல் போகாதீர்கள். மிகவும் வித்தியாசமானது.பிரமிக்க வைக்கும் இசைக்கோர்ப்பு. Mindblowing composition by Isai Jnani Ilayaraja!

Humm - Neepaartha.mp3

”நீ பார்த்த பார்வை” -2000-ஹே ராம்
முன்னணியில் ராணி முகர்ஜி மனதை அள்ளும் குரலில் ஏதோ பெங்காலியில் பேசுகிறார்.பின்னணியில் மெலிதான பியானோ இசை. இரண்டும் இனிமையாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு தேவதை குரல் வருடிவிட்டுப் போகிறது. பிரமிப்பு.

பின் வரும் ஹம்மிங்கை கவனி்யுங்கள். இரண்டு விதமாக வருகிறது.அடுத்த பிரமிப்பு.

"செந்தாழம் பூவில்”-முள்ளும் மலரும்-1978

Humm_SenthaPoovil.mp3

யேசுதாசின் வித்தியாசமான hill station driving humming?. ஞானி சார் அட்டகாசம்!.என் பாட்டி(இப்போது உயிரோடு இல்லை) ஹம்மிங்கை ரசித்துக் கேட்பார்.பெண்களால் அதிக அளவில் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாட்டு.

( மென்மையானஹம்மிங்கும், இதன் காட்சியும், பாடல் இனிமையும்,இசைக்கோர்ப்பும், ஹோம்லி ஷோபா/சிவப்பு கலர் புடவைப் பெண்/சரத்பாபுவின் ஆளுமைகள் மனஇயல்ரீதியாக பெண்களை ஒன்ற வைத்தன என்று சிலோன் ரேடியோவில் சொல்லக்கேட்டிருக்கிறேன்)

"காளிதாசன் கண்ணதாசன்”-1983-சூரக்கோட்டை சிங்கக்குட்டி
Humm-KalidasanKanna.mp3
ஆரம்பம் ஹம்மிங்.அட்டகாசம்.மேஸ்ட்ரோவின் குரலும் இழைகிறது.

”மெட்டி...மெட்டி”-1982-மெட்டி

Humm-Mettimetti.mp3
அற்புதமானஆண் ஹிந்துஸ்தானி டைப் ஹம்மிங் . இதே படத்தில்”மெட்டி ஓலி” பாட்டின் ஆரம்பத்தில் “கவுண்டர் பாயிண்ட்”ஹம்மிங் ராஜா ஒரு மெட்டிலும் ஜானகி வேறொரு மெட்டிலும் வித்தியாசமான ஹம்மிங்

"ஆனந்த தேன் காற்று”-1982-”மணிப்பூர் மாமியார்”
எஸ்.பி.ஷைலஜாவின் இந்துஸ்தானி ஹம்மிங் இனிமையோ இனிமை.
24Humm_anandthen.mp3


"என்னுள்ளே”-1993-வள்ளி Heavenly humming
Humm-ennulle ennule.mp3

"ஒரு ராகம்”-1982-ஆனந்தராகம்
Humm_OruRagam1.mp3

வித்தியாசமானக் கற்பனை. இதன் ஆரம்ப ஹம்மிங்கில் இதனுடன் பின்னி வரும் ”கும் கும்”தாளக்கட்டு இந்தப் பாடலுக்கு ஒரு சோக/ஏக்க effect கொடுக்கிறது.வேண்டிய இடங்களில் ஹம்மிங்கை அழகாக spray paint செய்திருக்கிறார் மேஸ்ட்ரோ.

"தெய்வீக ராகம்”-1980-உல்லாசப்பறவைகள்

(ஒலிப்பதிவு சரியில்லை) இதுவரைக் கேட்காத புதுமையான மனதை வருடும் தேவதை ஹம்மிங். It is absolutely out of the world humming!.எனன ஒரு அதீத கற்பனை!ஜென்சி சூப்பர்.

0.05-0.16 ஒரு வகையும் 0.45-1.04ல் வேறு வகையும்(ஹம்மிங் மற்றும் அதன் எதிரொலி)1.05 -1.10(ரிபீட்). “நீராட்டவா”2.20-2.23ல்கொஞ்சமாக 2.30-2.35 மீண்டும் பழைய ஹம்மிங்கிற்கு திரும்பும் தேவதைகள்.3.11 -3.20 ”தந்தானான”.

”தெய்வீக ராகம்” (0.51)என்ற வரியை ஜென்சி உச்சரிக்கும்போது பின்னணியைக் கவனியுங்கள்.”தெய்வீக....” என்ற எதிரொலி வரும்.ஆனால் 2.36ல் மீண்டும் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது எதிரொலி வராது.ஆனால் மறுபடியும் 4.04ல் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது வரும்.

ரூம் போட்டு உண்மையாக இசை(யோசி)க்கிறார் ராஜா.

3.45-3.54 ல் 2.20-2.23 ஹம்மிங் ரிபீட் ஆகும் என்று நினைப்போம்.ஆனால் அதேதான் ஆனால் கால அளவு மாறுபட்டு வித்தியாசமாக வரும்.அதான் மேஸ்ட்ரோ! பாடல் முடியும் போது மீண்டும் பழைய ஹம்மிங்.வளையம் முற்றுப்பெறுகிறது.

ஆடியோ சரி இல்லாததால்.பாட்டின் வீடியோவைப் பார்க்கவும்.



”ஆயிரம் மலர்களே”-1979-நிறம் மாறாத பூக்கள்
ஜென்சியின் மனதை உருக்கும் ஹம்மிங்.நேரடியாக கேட்காமல் எங்காவது காற்றில் மிதந்து வரும்போது கேட்டால் அள்ளிக்கொண்டு போகும்.
I love you Jency!
Humm-AayiramMalargale.mp3

”நான் ஒரு பொன்னோவியம்”--1980-கண்ணில் தெரியும் கதைகள்
Humm-Nan oru pon.mp3

இதில் குரூப் ஹம்மிங் இரண்டு அடுக்குகளாக வரும்.ஒரு நீண்ட அருமையான கிளாசிகல் ஹம்மிங்கும் உண்டு.

”ABC நீ வாசி”-1984-ஒரு கைதியின் டைரி
”வரைமுறை என உண்டு வாய் பொத்தி கேளு ”ஆரம்பிக்கும் முதல் சரணத்தில் வாணி/யேசுதாஸ மாறி மாறி பாடும்போது ”ஆஆஆஆஆ” பின்னணி ஹம்மிங்கும்,அடுத்து வரும் வரிகளில் இவர்கள் மாறி மாறி ஹம் செய்வார்கள்.

ஆரம்ப இசையை கவனியுங்கள் இசையோடு இசையாக ஹம்மிங்கும் ஒரு இசைக் கருவியாக பின்னிக்கொண்டுவரும்.

”கேளடி கண்மணி”-1989-புது புது அர்த்தங்கள்
Humm_KeladiKancom.mp3

எவ்வளவு வித்தியாசமான ஹம்மிங். அட்டகாசம்.எப்படியெல்லாம் ஹம்மிங்கு யோசிக்கிறார்.

இன்னும் பல அவற்றில் சில
1.தம் தம் தன்னம்
2.உறவெனும் -நெஞ்சத்தைக்கிள்ளாதே
3.பொன்வானம் பன்னீர்
4.எனதுவிழியில்
5.காற்றில் எந்தன் கீதம்


Thanks to RA