Results 1 to 10 of 122

Thread: Why I Consider IR Unparalleled

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ராஜா ஒரு இசையருவி. அருவியில் பெருக்கெடுத்து ஓடும் நீர் அகண்ட, குறுகிய ஆறுகளில், ஓடைகளில், மதகுகளில், வாய்க்காலில் என இறுதியில் கடைமடைப் பகுதி வரை பாய்ந்து பாசனத்திற்கு பயன்படுவது போல ராஜாவின் இசையில் தன்னை சேர்த்துக் கொள்ளும் எந்தவொரு இசைக் கலைஞனும் ஒருவித பூரணத்தை அடைவான். ஏனெனில் ராஜா பயன்படுத்திய வாத்தியக் கருவிகள் , இசைக்குறிப்புக்கள் எல்லாவற்றிலும் ஒரு நிபூணத்துவம் மிகுந்து காணப்படும். ராஜா நிர்ணயிக்கும் வாத்தியக் கருவிகள், சுருதி, மாத்திரை, ஒலியளவு எல்லாமே அவரது இசையை ஒவ்வொரு நாளும் இன்னும் இளைமையாகவே வைத்திருக்கும் ரகசியம்.



    இந்தக் காணொளியை கண்டுகளிக்கவும். ஸ்ரீதர் என்ற ட்ரம்மர் "அட மச்சமுள்ள.." பாடலை சிறப்பாக கையாண்டு உள்ளார். இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த துள்ளல் டூயட் இசையாக்கங்களில் ஒன்று. பாலுவும், ஜானகியும் செதுக்கியிருப்பார்கள். டூயட் என்றாலே பிரசித்தி பெற்ற ஜோடி பாலு-ஜானகிதான். எல்லாவித உணர்வுகளுக்கும் என்னற்ற பாடல்களில் அவர்கள் இருவரும் இணைந்து வெளிப்படுத்தியிருக்கும் ரசவாதம் ஈடு இணையில்லாத ஒன்று. வேறு எந்த ஜோடியிடத்திலும் அப்படி ஒரு பன்முகத் தன்மையை பார்க்கவே முடியாது.

    அசலில் ட்ரம்மை கையாண்டவர் புரு. இரண்டாம் இடையிசையில் அவர் காட்டியிருக்கும் ஜாலம் சொல்லி மாளாது. ஒவ்வொரு வாத்தியக் கலைஞனும் இசையின் முன்னாள் தன்னை அப்படியே அர்ப்பணித்து வாசிக்கும் இசை அது. அதையே நாம் இந்தக் கானொளியில் ஸ்ரீதரிடத்திலும் காணலாம். சிறப்பான முயற்சி.

    https://soundcloud.com/shanmuganagar...olling-violins
    Last edited by venkkiram; 10th September 2014 at 09:51 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Likes K liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •