ட்வீட்டரில் காணக் கிடைத்த சில வாசகங்கள். இவற்றோடு ஒத்துப் போவதால் இதை இங்கு பதிவு செய்கிறேன்.


** கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் இந்த இந்திய தேசத்தில் உருவானவர்களில் இளையராஜாவை விடப் பெருங்கலைஞன் எவன்?

** நுனிப்புல் மேய்ந்தே பழகிய தமிழர்களுக்கு இசையின் அரசியலும், நுட்பங்களும் புரியாமல் போவதில் ஆச்சரியமில்லை.

** தலைசிறந்த ஈரான்/ கொரியப் படங்கள் உலகிற்கு ஈரானின் கொரியாவின் கலாச்சாரத்தையும் வாழ்வியலையும் பறைசாற்றுகிறது. அதுதான் கலையின் வேலை. அப்படி ராஜாவின் இசை தமிழர் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் காட்சிப்படுத்த மிக வலுவாகப் பயன்படுகிறது. இது தான் உலகத்தரம். நம் கலாச்சாரத்தை நம்முடன் சற்றும் தொடர்பில்லாத மாற்றுக் கலாச்சார மனிதர்களிடம் எடுத்துச் செல்லும் கருவிதான் கலை - இயல்/ இசை/ நாடகம். அப்படி நமது முகத்தை நமது முகமாகவே அச்சு அசலாக பிரதிபலிக்க உறுதுணையாக இருக்கும் இசை ராஜாவினுடையது.

** இளையராஜா மட்டும் இல்லையென்றால் இரவென்பது வெறும் இருட்டாகவே அறியப்பட்டிருக்கும்...!!



முத்தாய்ப்பாக மு.க அவர்களின் புகழாரம்..

அருவியின் ஆலோலம் - விடியலின் இனிமை
கோகிலத்தின் கூவல் - பூகம்பத்தின் சுழற்சி
தென்றலின் தெம்மாங்கு - பிரளயத்தின் ஆவேசம்
இவைதான் இசை ஞானி இளையராஜாவின் இசை.