-
15th June 2015, 04:22 AM
#1
Junior Member
Devoted Hubber
சின்ன பய மனசு சும்மா இருக்குதில்லை என்னை படுத்துதடியோ - இதை தாண்டி இன்னும் என்னால் வெளியில் வந்து மற்ற பாடல்களை கேட்க முடியவில்லை. ஆரம்பமே ஜோர். பாடல் முழுவதும் நிறைய வாத்தியங்கள். இந்த பாடல் நம் அனைவரையும் வசியம் பண்ணும். கௌரி மனோகரி ராகமாம்.
சரியான முறையில் மார்கெட்டிங் செய்தால் இந்த பாடல் 2015ன் ஹாட்ரிக் ஆகலாம். ராயல்டி பிரச்சனையில் fm மற்றும் சேனல்களில் போடுவார்களா?
ஒவ்வொரு பாடலிலும் ஒரு கதை சொல்ல வேண்டும், முன்னுரை, இடைவேளை, கிளைமாக்ஸ் என்று எல்லாவற்றையும் ஒரு பாடலில், 5 நிமிடத்தில் சொல்லியாக வேண்டும், அதற்குள் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று ஒரு முறை சொன்னார். - அதெல்லாம் இந்த பாடலில் உண்டு.
72 வயதிலும் தடம் புரளாமல், காலத்தை அனுசரித்து ராஜா சார் போய் கொண்டே இருப்பது ஆச்சர்யம். சிங்கம் சிங்கம் தாங்க, சிலிர்தெலுந்து நிக்குது...
-
15th June 2015 04:22 AM
# ADS
Circuit advertisement
Bookmarks