இதென்ன கலாட்டா.

அந்த பொன்னு டி.டி ரொம்ப பேசும். விருந்தினரை பேச விடாமல் குறுக்கே பேசும். ராஜா போல் ஒருவருடன் பேசும் போதாவது அது போல் செய்யாமல் அவர் கூறுவதை பொறுமையாக கேட்டு, பொறுப்பான கேள்விகளை கேட்கும் என்று நம்புவோம்.

மற்றபடி இது ஒரு ஆச்சரியமான மாற்றம் ராஜாவிடம். மழை சேதம் தொடர்பாக நடந்த விழாவில் ஒரு நிருபர் இவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதினால் ஏற்பட்ட சர்ச்சையை தெளிவு படுத்துவதற்காக ஒரு வேளை இந்த சந்திப்புக்கு ராஜா சம்மதம் தெரிவித்திருப்பாரோ? விஜய் டி.வி. சென்ற ஆண்டு ராஜாவிற்கு விருது அளிக்க விரும்பி அவரும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு வந்து விழா அமைப்பாளர்கள் சொதப்பியது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அப்படியும் ராஜா வர சம்மதித்திருக்கிறார் என்றால் விஷயம் இல்லாமல் இருக்காது.