-
28th March 2016, 06:37 PM
#11
வாழ்த்து...
இசைஞானி இளையராஜா அவரது வாழ்வில் ஏராளமான பட்டங்களையும், விருதுகளையும் வென்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை கடந்த 30 ஆண்டுகளில் 4 முறை வென்றுள்ளார். இப்போது ஐந்தாவது முறையாக தேசிய விருது அவருக்கு கிடைத்திருக்கிறது. அதுவும் குறிப்பாக அவர் இசையமைத்த 1000-ஆவது திரைப்படமான ‘தாரை தப்பட்டை’ படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. அந்த படத்தில் மனதை வருடும் வகையில் இளையராஜாவின் பின்னணி இசை அமைந்திருக்கிறது. இது அவருக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும்.
சம காலத்திய இசையமைப்பாளர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் இளையராஜா. மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்து திரையுலகில் கண்டங்களை கடந்து சாதனைகளை படைத்து இசையுலகின் முடிசூடா மன்னராக திகழ்பவர். பலருக்கும் பல நேரங்களில் தனிமையை வெல்ல இளையராஜாவின் இசை தான் உதவியாக இருந்திருக்கிறது. இதற்கு நானும் விதிவிலக்கல்ல. அவ்வகையில் இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது எனக்கும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியளிக்கிறது. -
டாக்டர் ராமதாஸ் (பாமக)
-
28th March 2016 06:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks