Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Jahir Hussain



    நேற்று போல இருக்கிறது,,, நடிகர் திலகம் மறைந்து 16 ஆண்டுகள் ஆகி விட்டது,,, மறக்க முடியாத மாமனிதராகவும் நினைக்க நினைக்க நினைவு கூறப்படும் உயர்ந்த நடிகராகவும்,,, பந்தபாசம் மிக்க குடும்பத் தலைவராகவும்,,, ரியல் ஹீரோவாகவும் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்,,, முதலமைச்சராக பதவியில் இருந்தபோது மறைந்த தலைவர்கள் மூவர்,,, பேரறிஞர் அண்ணா அவர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்,, அண்ணா அவர்கள் மறைவின் போது காட்சி ஊடகங்கள் இல்லை,,, ஆகவே கின்னஸில் பதிக்கப்படும் அளவுக்கு ஜனகோடிகள் சங்கமம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தது,, இன்னொரு காரணம் எதிர் பாரா மரணம்,,, எம் ஜி ஆர் அவர்கள் மரணத்தின் போது ஓரளவுக்குத்தான ஊடக வெளிச்சம் இருந்தது,, ஜனத்திரள் வந்தது,, ஜெயலலிதா மரணம் கொஞ்சம் மாறுபட்டது,,, ஆனால் நடிகர் திலகம் மரணம் கொஞ்சம் வித்தியாசமானது,, மரணிக்கும் போது எவ்வித பதவிப் பின்புலமும் இல்லை,,, காட்சி ஊடகங்கள் தெரு தெருவுக்கு வீடு வீட்டுக்கு வந்து விட்டது,, அதோடு அல்லாமல் பெரும்பாலான தொலைக் காட்சிகள் லைவ் டெலிகாஸ்ட் செய்தன,,, அதையும் தாண்டி சென்னை குலுங்கியது ,,, ஒவ்வொருவர் வீட்டிலும் தன் சகோதரனை தந்தை ஸ்தானத்தில் வைக்கப்பட்ட ஒரு மாமனிதரை இழந்த சோகம் படிந்த முகங்களோடு வலம் வந்தார்களே ஏன்?
    எவ்வித பதவியும் வகிக்காமல் அரசு மரியாதையோடு துப்பாக்கி குண்டுகள் முழங்க உடலெரிக்கப்பட்டது ஏன்? காரணம் இருக்கிறது,,, உலகெங்கும் ரசிகர்கள் கட்சி மாறுபாடு இன்றி அரசியல்வாதிகள் முக்கிய பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் உயர் அந்தஸ்த்தில் இருப்பவர்கள்,,, எம் பிக்கள் எம் எல் ஏக்கள் அண்டை மாநில முக்கிய பிரமுகர்கள் சமகால நண்பர்கள் நடிப்புலகில் இருப்பவர்கள் நாடக நடிக நடிகையர்கள் மொத்த தொழில் நுட்ப கலைஞர்கள் என் பட்டியலில் விடுபட்ட முக்கிய பிரமுகர்கள்,, அத்துணை பேரும் இந்த ஒற்றை மனிதருக்கு ரசிகர்கள்,, அவரவர் வீடுகளில் கோடிக்கணக்கானோர் தொலைக் காட்சிகளில் பார்க்கிறார்கள்,, செய்தித் தாள்களில் பார்க்கிறார்கள்,, பிறகு ஏன் நேரிடையாக அஞ்சலி செலுத்த அத்தனை கோடி மனிதர்கள் வந்தனர்,, அவர்தான் சிவாஜி,, கலைஞர்களின் தலைமகன்,,, எல்லார் உள்ளங்களிலும் உள்ளவர் சிவாஜி,, அறிஞர் அண்ணா மறைவின் போது செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி முதலமைச்சர் அண்ணா மரணம் என்றும் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா மரணித்த போது முதல்வர் எம் ஜி ஆர் மரணம் முதல்வர் ஜெயலிதா மரணம் என்று தலைப்புச் செய்திகள் வந்தது,, சிவாஜி மரணித்த போது "இமயம் சரிந்தது",, வீழ்ந்தது கல்தூண் என்று செய்தி வெளியிட்ட செய்தித்தாள்கள் நிறைய்ய,,, மன்னவன் சென்றானடி என்று ஒரு வார இதழ் அஞ்சலி செய்தி வெளியிட்டது,,, அவர்தான் சிவாஜி,, நடிகராக வாழும்போது சிறந்த நடிகர்,, அரசியலில இருந்த போது அப்பழுக்கற்ற தலைவர்,, அன்னை இல்லத்தில் பாசமுள்ள குடும்பத் தலைவர்,, நண்பர்களுக்கு இனிய நட்பாளர்,,, இப்படி அவர் வாழ்நாள் முழுவதும்" நல்ல" "சிறந்த" "உயர்ந்த" என்ற அடை மொழிகளோடு வலம் வந்தவர்,, ஆதனால்தான் அவர் மறைந்தபோது அவர் பெயரை குறிப்பிடாமல் அவர் அடைமொழிகளை குறிப்பிட்டு செய்தி வெளிட்டதை பார்க்க முடிகிறது,, பெருந்தலைவரின் மரணமும் உலுக்கியெடுத்த ஒன்றுதான்,,, பெருந்தலைவருக்கு பெருந் தொண்டராக என்றுதன்னை அடையாளப்படுத்தக் கொண்டாரோ அன்று முதல் அவர் கண்மூடும் வரை இவர் காலம் முடியும் வரை அவர் அடியொற்றி நடந்தார்,,, தேர்தல் வெற்றிகளில் மமதை கொள்ளாது இருந்ததும் தோல்விகளின் முகட்டில் முனை முறியாது நின்றதும் கர்மவீரருக்கு எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளையும் இவரும் பெற்றார்,,, அப்பழுக்கற்று நின்றார்,, அதனால்தால் மரணத்தை வென்று இன்று வரை மக்கள் மனதில் வாழ்கிறார்,,
    ஜூலை 21 என்பது நினைவு நாள் அல்ல,, மறக்கப் பட்டவர்களுக்கே ஆண்டுக்கொரு தினம் அவர்தினம்,, என்றென்றும் நினைக்கப்படும் மனிதருக்கு ஆண்டு முழுதும் நினைப்பு தினம்,, நல்ல மனதில் குடியிருக்கும் நடிகராண்டவா,, நினைவில் நிலைத்திருந்து நாளும் வேண்டவா!


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •