Song # 2

"தப்பித்து வந்தானம்மா"

படம் : பூம்புகார்
பாடல்: கவிஞர் மாயவநாதன்
இசை : ஆர். சுதர்சனம்

தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா
காலம் கற்பித்த பாடத்தின்
அடிதாங்க முடியாமல்
தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா

கிளை விட்டு கிளைதாவி குடி வைத்துக் கொண்டவன்
முறிபட்டு நின்றானம்மா.. இன்று
மனம் கெட்டு மதி கெட்டு நிதி கெட்டு, நெறி கெட்டு
நிலைகெட்டு வந்தானம்மா
இங்கு நேராக வந்தானம்மா

தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா

பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்தவன்
கைநெல்லும் விட்டானம்மா
பள்ளத்தில் வீழ்ந்து எழுந்தபின்
பல்லக்கை தேடி நடந்தானம்மா.. இன்று
தேடி நடந்தானம்மா

இவன் போட்ட கணக்கொன்று அவள் போட்ட கணக்கொன்று
இரண்டுமே தவறானது
யார் போட்ட புதிருக்கோ இருவரும் விடையாகி
நின்றதே முடிவானது

மனித குலத்துக்கே கதையானது
மனித குலத்துக்கே கதையானது