Results 1 to 10 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஹா ஹா ஹா ஹா

    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
    பூட்டி வச்ச மன கதவு திறக்குமா ?
    கூட்டி வந்து அன்ப கண்ணில் காட்டுமா ?
    வான் நிலவு எங்க வாழ்வு வளருமானு பாக்குதா ?
    வளர்வதற்கு நோம்பிருந்து தெய்வங்களை வேண்டுதா ?
    என்ன சொல்வதோஒ ஒ ஒ .....?
    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?

    எந்த நாடு போனாலும் , இந்த கூடு வேகுது ,
    கூட்டத்தோடு வறுமையும்தான் நாடு மாறுது ,
    பாதி வயிறு காயுது , மீதி வயிறு தேயுது ,
    மனுஷ சாதி மனுஷனத்தான் உசிர வாங்குது ,
    ஆட்டம் காணும் வாழ்க்கையிலே , ஆட்டம் வருது அதிசயமா ,
    பட்ட பாடு எட்டி நிக்க , பாட்டு வரும் அதிரசமா ,
    வெறும் வார்த்தைகள் கேட்கையிலே ,
    துருதுருக்குது மனதினிலே ,
    திருவாசகம் கோவிலிலே , கருவாசக தெருவினிலே ,
    ஆதியிலே எழுதி வச்ச பாட்ட மட்டும்கேட்டுக்கோ ,
    காச உள்ள பூட்டிக்கோ
    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?

    கல்லும் மண்ணும் கலந்தாலும் ,
    எறிஞ்ச சோத்துக்கு அடிதடிதான்
    கையில் வந்து பசி தொடச்சா , அது அமிர்தமம்மா ,
    ஒட்டி போன வவுத்தளையும் , அடிக்கிற வகை ஏராளம் ,
    தட்டி கேட்டு , தவுச்சதுண்டு எதுத்து கேட்டோமா ?
    கல்லு முள்ளில் படுத்தாலும் ,
    தூக்கம் வருது படு சுகமா ,
    முழிகிறபோ வேதனையும் கண்முழிக்கும் பாதகமா
    உலகம் எங்கும் ஏழையுண்டு
    துன்பம் என்னும் தொடர்பும் உண்டு
    ஒட்டு போட்ட துணி போல கொட்டிடாத வாழ்க்கை உண்டு ,
    நான் படிக்கும் பாட்டு மட்டும்,
    வீதி எங்கும் வெடிக்கும் , ஏழை துன்பம் துடைக்கும் ,
    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
    பூட்டி வச்ச மன கதவு திறக்குமா ?
    கூட்டி வந்து அன்ப கண்ணில் காட்டுமா ?
    வான் நிலவு எங்க வாழ்வு வளருமானு பாக்குதா ?
    வளர்வதற்கு நோம்பிருந்து தெய்வங்களை வேண்டுதா ?
    என்ன சொல்வதோஒ ஒ ஒ .....?
    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?

    என் மன வானில் .....யேசுதாஸ், ஸ்ருதி கமலஹாசன்.....ஸ்ரீ.இளையராஜா

    http://www.divshare.com/download/6738303-fd0

    vinatha.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •