Quote Originally Posted by bis_mala
Quote Originally Posted by Sudhama
உரிதே அறிந்தோரைக் கேட்டுக்-கேட்டு எமக்கும் உண்டு நற்காலம் எனவே
தரிசிக்க சிவனை ஐயர் ஒருவர் அறிவூட்ட கோயில் நாடினோம் பறையரே
இவ்வரிய நல்வழியைக் காட்டிய பெருந்தகையான ஐயர் யார்? அவர்பற்றிச் சில வரிகள்......
யாரோ ஒருவர் தெரியாது.



மந்தித் தாய்-நெறியே ...


...நந்தன் கண்ட சிறந்த வாழ்-நெறி.?




[html:8fe965cff0]

</a>

[/html:8fe965cff0]


[முன் குறிப்பு : அரும்-பத சொற்பொருள்… அடிக்கீழே காண்க]


திருவருள் என்றால் என்ன என்றோ, நமக்கு மேம்பட்ட-வல்ல கடவுள்
ஒருவன் மறைந்து-இருந்தே நம்மை ஆண்டு-காக்கிறான் திட்டம் இட்டே
கருத்தே வாழ்க்கை என்றே அறியாத பாமரராய் வாழ்ந்து வளர்ந்தோமே
பொருள் ஆயன் கைத்-தாம்பு எல்லை-வரம்பே வாழ்வு மாட்டு விலங்கே.!

விலங்கு மிருகமாய் இடி, மின்னல் பயந்து ஒளிந்து, கட்டுப்பட்ட சங்கிலி
விலங்கு வழுவா தற்குறைவு இழிவு-மனப்பான்மையரே தான் சிந்தியாது
கலங்கு மனக்கவலை மீளாது நித்தம் கணமும் காலம் கடத்திய பறையர்
துலங்கு கண் முன்னே சுடுகாடு வருவோர் பிறர் கண்டே உலகு புரிந்தேன்

புரிந்தேன் என்னோடு சுடுகாடு-வாழ் மறையவன் யாவர்க்கும் பொதுவே
சரித்திரம் நெற்றிக்-கண்ணன் தெரிந்து, புத்துணர்ச்சி பெற்றேன் நம்பிக்கை
உரிதே அறிந்தோரைக் கேட்டுக்-கேட்டு எமக்கும் உண்டு நற்காலம் எனவே
தரிசிக்க சிவனை ஐயர் ஒருவர் அறிவூட்ட கோயில் நாடினோம் பறையரே

பறையனே சிறியேன் நந்தன் கோவில்-சாமி காணவொட்டா குறுக்கே மாடு
மறைத்துக் கிடந்ததையே விலக்கி எமக்கு காட்சி தந்தான் ஆகா சிவ சிவா
சிறை வாழ்க்கை விட்டே சிவலோகம் விடுதலை வேண்டி அழுது-புலம்ப
இறைவன் தன் உயர்-சீலம் உலகோர்க்கு துலங்கச்செய்தான் நானே கருவி
.
கருவி நம்மைக் கடவுள் தன்னையும் தரணி வாழ்-நிலை அறியச்-செய்யும்
கருத்தே புரிந்தேன் சிவ-பெருமான் கோயில் தரிசனத்தால் ஞானம் பெற்றே
பொறுக்கவோ புவி-நரகு, முன்-பிறவி பாவ-புண்ணிய வினைக்-கடன் நீங்க
திருத்தி நம்மை இறைவனின் மந்திக்-குட்டியாய் வாழ சுவர்க்கம் புவியே
.
புவிப்- பிறவி மாந்தராய் ஏன் பிறந்தோம்.? உத்தம-பிறவி எனத்-தக்கோமா.?
தவிப்பதற்கோ தரணி வாழ்க்கை, மிருகம் போல் கிட்டியதே ஏற்றுக் கிடக்க
தெவிட்டாத் தாழ்வோ.? என்னவர்-போல இதுவே பறையர்-கதி என மாய்ந்தே
ரவி ஒளி போல தாயாய் கடவுள் துணை பயன்-கொண்டால் பயம் ஏனோ.?
.
பயம்-ஒன்றே மாபெரு பலவீனமே பலம்-மிக்க யானை சிங்கமும் அடிமை
செயல் யாவும் பரமனால்-என அறிந்தே அவன் துணையை பயன் கொண்டே
புயலையும் வென்று ஆளலாம், பயம் நீக்கி இறைவனையே முற்றும் நம்பி
ஜயம் வெற்றி திண்ணம் மேலோங்க முயல், கிடவாதே புவி-இயல்பு என்றே

இயல்பு சிவன் நந்தி வழி-மறித்து மறைத்து காத்துக்-கிடக்கும் வாகனன்
செயல் கடமை, தலையிடாதே என்றார் ஊரார். என்-துதி புலம்பல் கேட்டு
முயலாது ஐயன் தரிசனம் காணாது திரும்பிச் சென்றேனா சிறியனேனே
இயற்கை அழிவு, கேடு-வாழ்க்கை ஒடிந்து வாளா-கிடக்க சிறை மிருகமோ.?
.
சிறையிலும் சீர்-மிகு சிம்மாசன மன்னனாய் ஆளலாம் பரமன் துணையால்
இறை துணை-இன்றி ஆவது ஏது எவரும் எது சிறிது மா-பெரிது எனினும்
மறையவன் துணையோடு ஆகாதது ஏதும்-இல்லை சிறியோமே ஆயினும்
நிறை-வாழ்வு சுவர்க்கம் மோட்சம் கொள்ளலாம் இறை தாயைக் கட்டியே

கட்டியே தன்னைச்-சற்றும் இடை-விடா இறுக்கம் நழுவா அகலாது-ஒட்டி
குட்டி வாழ்-நெறி கடைப்பிடி நோக்கம் தாயைப்-புரிந்து சிசு பங்கே அதிகம்
சுட்டே தீ, ஊசி-குத்தி, கத்தி அறுக்கினும் மருத்துவனை முற்றும் நம்பியே
விட்டே அகலாது, வைத்தியம் சொல் பின்பற்றும் நோயாளி மாந்தர் நாமே

மாந்தர் நாம் இறைவனின் துணை-பெற இயலும் ஒரே அரி பிறவி புவி
வேந்தராய் வாழப்-பிறந்தோம் நம் நல்வாழ்வு உயர்வு நம் கையிலே என
கோந்தாய் இறைவனை ஒட்டி அகலா கைப்பிடி-நழுவா மந்தித் தாய்-நெறி
ஏந்து-தாய் ஒத்துழைத்து அதிக சிசு-பொறுப்பே நந்த-மாந்தன் வாழ்-சிறப்பே

சிறந்தே வாழ்ந்து-ஓங்கவே படைத்தான் பார் பரமன் நம்மை உன்னத தலை
சிறந்த முழுமை ஆறறிவு மனிதனாய், பூவுலகில் கீழ்ப்பிறவி மூட மிருகம்
மறந்தவை தன்னைத்-தானே தனது வலிமையையே தானே அறியா பேதை
இறந்து-திரி நடை-பிணத்திற்கும் ஈசனுக்கும் இடைப்பிறவி புவி-இறைவராய்

புவி-இறைவராய் நாமே புவி ஆண்டு இங்கேயே சுவர்க்கம் கண்டு ஓங்கி வாழ
தெவிட்டா இருவகை இன்பமும் பேரின்பமும் கொள்ள-வல்ல ஒரே மா-பிறவி
கவி-பாடினோம் கனிவுறு சொற்களால் நாம் இருவகை அடியராய் முன்னோடி
தவியா அலகிலா விளையாட்டு நெறி குழம்பாதே சைவ-வைணவ கண்களே

கண்களே உமக்கு இருவகை அறுபத்து-மூவர் நாயன்மார், பன்னிரு ஆழ்வார்
விண்-உலகு சிவலோகம் வாழ் சிவனடியான் சிறியேன் பேரின்பன் நந்தனும்
மண்வாழ் பாணர் மறை-இறையாய் திருமாலடியர் ஆழ்வாரும் பறை கேளீர்
புண் தற்கொலை மன-நோயரே புரிவீர் சிவன் திருமாலை முப்பார்வையால்
.
.... தொடரும்.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> >>>>>>>>>>>>>>>>>>>>>

[அரும்-பதச் சொற்பொருள் :---

கைத்-தாம்பு = கை-வசப்பட்ட கயிறு --- ஆயன் = மாடு மேய்க்கும் இடையர்]

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< <<<<<<<<<<<<<<<<<<<<


================================================== ====================

.